siruppiddy nilavarai.com navarkiri.net
Showing posts with label தொழிநுட்ப ச்செய்தி. Show all posts
Showing posts with label தொழிநுட்ப ச்செய்தி. Show all posts

February 20, 2022

உலகம் முழுக்கWhatsApp பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ள புதிய அப்டேட்

உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் தற்போது மிகவும் பயனுள்ள அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பயனர்கள் எளிய வகையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.  வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் குரல்களிலேயே தகவல்களைப் பதிவு செய்து அனுப்பும் வாய்ஸ் மெசேஜ்
 வசதியும் உள்ளது.
இந்நிலையில் இந்த வாய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய பயனுள்ள மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வாட்ஸ்அப்பில் யாராவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அவருடைய பெயரை கிளிக் செய்து, சேட் விண்டோவில் 
தான் அவர் அனுப்பிய மெசேஜ்ஜை பார்க்க முடியும்.
 ஒருவருடைய சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டால் வாய்ஸ் மெசேஜ் தானாக நின்றுவிடும். 
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் நாம் வாய்ஸ் மெசேஜ்ஜை பிளே செய்துவிட்டு, சேட் விண்டோவில் இருந்து வெளியே வந்தாலும் பின்புறத்தில் வாய்ஸ் பிளே ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஆடியோ ஃபைல்களையும் பிளே செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.ஓஎஸ் வெர்சன் 22.4.75 வைத்திருப்பவர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். ஒருவருடைய வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுக்கொண்டே பிறரிடம் சேட் செய்வதற்கு வசதியாக இந்த அம்சம் 
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது தரப்படும் என தகவல் வெளியாகவில்லை. அதேபோன்று வாட்ஸ் ஆப் வெப்பிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




October 23, 2020

எல்ஜி நிறுவனம் சுருட்டி வைக்கக்கூடிய தொலைகாட்சியை அறிமுகம் செய்துள்ளது

சுருட்டி வைக்கும் வசதி கொண்ட தொலைக்காட்சியை யை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி தொலைக்காட்சியை உலகில் முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.65 அங்குல கொண்ட இந்த டிவி, சிறிய பெட்டி ஒன்றை அடிதளத்தில் கொண்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப ஒளி, படங்களின் அடர்த்தி உள்ளிட்ட அளவுகளைத் தானாக மாற்றக்கூடிய வகையில் இந்த தொலைக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
ஓஎல்இடி ரக திரையை, Remote control மூலம் அந்த பெட்டிக்குள் சுருட்டி வைக்கும் வகையிலும் வெளியே எடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர நவீன கருவிகளில் உள்ள அத்தனை வசதிகளும் இந்த
 சுருட்டல் டிவியில் அடக்கம்.
திரையின் அளவை பொறுத்து 3 வித சேவைகளை வழங்கும் இந்த தொலைக்காட்சி, தென்கொரியாவில் முதல் முதலாக விற்பனைக்கு வந்துள்ளது.வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொருத்து
 மற்ற நாடுகளுக்கு இதை ஏற்றுமதி செய்ய எல்ஜி
 நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது நிர்மாணித்துள்ள விலை இலங்கை 
மதிப்பில் 11.066.994,00 ரூபாயாகும்/

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


August 26, 2020

அப்பிள் நிறுவனம் தண்ணீரில் மிதக்கும் வண்ணமயமாக கடைகளை உருவாக்கி சாதனை

 

தண்ணீரில் மிதக்கும் புதுவகையான பலூன் கடைகளை, அப்பிள் போன் நிறுவனம் தயாரித்து பரீட்சித்துள்ளது
.சிங்கப்பூரில் பல வீடுகளில் ஒளிரும் பலூன்களை செய்து பறக்க விடுவது வழக்கம். அந்த கலாச்சாரத்திற்கு அமைவாக, 
தண்ணீரில் மிகக்க கூடிய பலூன் போன்ற கடைகளை முதல் தடவையாக அப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.இக் கடைகள் 
சிங்கப்பூரில் உள்ள ஏரிகளில் மிதக்கிறது. 
இக் கடைகளுக்கு செல்ல மக்கள் முந்தியடிக்கிறார்கள். அது போக சிங்கப்பூர் மிகச் சிறிய நாடு. அங்கே இட நிலப்பரப்புக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. 
எனவே ஏரிகளில் கடைகளை உருவாக்கி சாதனை படைக்கிறது 
அப்பிள் நிறுவனம்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



June 26, 2020

இவர்கள் இப்படித் தான் இருப்பார்களாம் எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்கள்

நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு
.4,13,22, 31 ம் திகதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.
குண அமைப்பு:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு 
இரண்டாக பேசுவார்கள்.அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு
 கொண்டவர்களாக இருப்பார்கள்.
எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல
 எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான
 பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது.
 எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். பொதுவாகவே 
இவர்கள் எதிலும், சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள்.காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது
. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு 
மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.உடலமைப்பும், ஆரோக்கியமும்:நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர
 உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய
 கால்கள் உடலுக்கு கேற்றபடி
 இல்லாமல் குறுகலாக இருக்கும்.மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல 
உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு 
போன்றவைகளால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.குடும்ப வாழ்க்கை:நான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை 
ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே
 கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக 
அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ
 பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும், கவனமுடன் நடந்து கொண்டால், இவர்களின் குடும்ப
 வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.பொருளாதாரம்: நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால், யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும்
 ஆற்றலும் இருக்கும்.
தொழில்:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு
 உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும், பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை
 கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.நண்பர்கள், பகைவர்கள்:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு 
நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.ராகுவுக்குரிய காலம்:ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும்
 செய்யாதிருப்பது நல்லது.
ராகுவுக்குரிய திசை:தெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்:நான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் 
உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு
 உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.பரிகாரங்கள்:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து
 அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.
அதிர்ஷ்டம் தருபவை: அதிர்ஷ்ட திகதி : -1,10,19,28, அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்,
அதிர்ஷ்ட திசை -கிழக்கு, அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு, அதிர்ஷ்ட கல் – கோமேதகம், அதிர்ஷ்ட தெய்வம்- துர்க்கை

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


May 3, 2018

அறிமுகமாகிறது வாட்ஸ்அப் இல் புதிய வசதி!-

குரூப் வீடியோ கால் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடந்த அந்நிறுவன கூட்டத்தில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒரே நேரத்தில் வீடியோ கால் மூலம் 4 பேர் பேச முடியும் என கூறப்படுகிறது.
எனினும், இந்த வசதி எப்போது அறிமுகமாகும் என்பதை, அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
அதேபோல், பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில், வாட்ஸ் அப் செயலியில் புதிய ஸ்டிக்கர்களை விரைவில் பார்க்கலாம்.
உலக அளவில் வாட்ஸ் அப் செயலியை 100 கோடிக்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் நாள்தோறும் 20 கோடி பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


January 31, 2018

இதோ கூகுள் குரோமில் புதிய வசதி!

பிரபல தேடுபொறித் தளமான, கூகுள் நிறுவனமானது கூகுள் குரோமில் மியூட் (mute) என்ற புதிய வசதியை இணைத்துள்ளது. இதன் மூலம், குரோமில் தானாக பிளே(play) ஆகும் குரல்ப்பதிவு மற்றும் காணொளிகளை நிறுத்தம் செய்துகொள்ள முடியும்.
குரல்ப்பதிவு மற்றும் காணொளிகள் தானாகவே இயங்குவதால் இணையப் பயன்பாடு வீணாகிறது. இது போன்ற விளம்பரங்களைத் தடுக்கப் பல்வேறு அப்ளிகேஷன்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுவந்தாலும், வலைதளத்திற்குள்ளே இதுபோன்ற வசதி 
வெளியானதில்லை.
clear: both; text-align: center;"> இந்த நிலையில், கூகுள் நிறுவனம் சமீபத்தில் கூகுள் குரோமில் இந்த வசதியை பீட்டா பதிப்பில் (Beta Version) வெளியிட்டுச் சோதனை மேற்கொண்டது. அதன் சோதனை ஓட்டம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அதன் முழுப் பதிப்பினை (Version) கூகுள் வெளியிட்டுள்ளது.
இந்த வசதி கணினிகளில் உள்ள குரோம் செயல்பாட்டிற்காக மட்டும் வெளியிடப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


December 12, 2016

இளைஞர்களால் எரிமலை குளம்பில் போட்டு சோதனைக்கு உள்ளான ஐபோன்.

ஐபோன் 6 ஸ்மாட்போனை எரிமலைக் குளம்பில் போட்டு, இளைஞர்கள் சோதித்து பார்த்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தொழில்நுட்பம், டிசைன் ஆகியவற்றிற்கு உலகம் முழுவதும் எப்போதும் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் ஐபோன் 6 செல்போனை இளைஞர்கள் வித்தியாசமாக முறையில் சோதனை செய்து பார்த்துள்ளனர்.
எரிமலையில் இருந்து வெளியேறும் லாவாவில், ரூ.70,000 மதிப்புள்ள ஐபோன் 6 செல்போனை போட்டுள்ளனர். இதனால் அது தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடையச் செய்யும் இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



October 1, 2016

இண்டர்நெட் இல்லாமலே ஜிபிஎஸ் பயன்படுத்தலாம்! எப்படி தெரியுமா?

ஜிபிஎஸ் (GBS) என்பது ஸ்மார்ட்போனில் முக்கியமான அம்சமாகும். இதன் பயன் நாம் ஆளில்லாத இடத்தில் மாட்டிக் கொள்ளும் போது 
தான் தெரியும்.
இதைப் பயப்படுத்தி குறிப்பிட்ட இடத்தை சென்றடைய கண்டிப்பாக இண்டர்நெட் என்பது அவசியமானதாகும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் இண்டர்நெட் இல்லை என்றால் என்ன 
செய்வீர்கள்?
கவலையவிடுங்க.. இண்டர்நெட் இல்லாமலே உங்கள் ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
குறிப்பிட்ட பயணத்திற்கு முன்பே ஆப்லைன் மேப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை செய்ய உங்களிடம் நிச்சயமாக இண்டர்நெட் இருக்க வேண்டும்.
உங்களிடம் ஒருவேளை கூகுள் மேப்ஸ் (Google maps) ஆப் இல்லையெனில் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட இடத்தின் பெயரை கூகுள் மேப்ஸ் ஆப்பில் உள்ளிட்டு நீங்கள் விரும்பும் இடத்தின் தேடலை நிகழ்த்த வேண்டும்.
இடம் பெயரை பதிவு செய்த பின் கீழே உள்ள பதிவிறக்க பொத்தாபை கிளிக் செய்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
ஆஃப்லைன் மேப் பதிவிறக்கம் செய்யப்பட்ட பின் நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கலாம். உங்கள் இண்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால் கூட கூகுள் மேப்ஸ் தன்னிச்சையாக குறிப்பிட்ட இடத்தை கண்டறிந்து ஆஃப்லைன் வரைபடங்கள் உதவியுடன் வழிகாட்டலை
 நிகழ்த்தும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



June 29, 2016

இனி செல்போன் சார்ஜ் செய்ய மணிபர்ஸ் போதும்!

நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் மூலம், செல்போனை சார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிலர் செல்போனை அதிகமாக பயன்படுத்தும் போது அதிலிருக்கும் சார்ஜ் இறங்கிவிடுவதால் செல்லும் இடங்களில் சிரமப்படுகின்றனர். இதனால், செல்லும் இடமெல்லாம் சார்ஜரை எடுத்து செல்ல 
வேண்டியிருக்கிறது.
தற்போது ஐபோன்களை சார்ஜ் செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சார்ஜ் செய்யும் பவர் பேங்க், மணி பர்ஸுக்குள் நிரந்தரமாக பொருத்தப்படும். அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி ஆகியவை மூலம் ஐபோனுக்கு சார்ஜ் ஏற்றப்படும்.
இதன் மூலம் ஊர் ஊராக சுற்றி வருபவர்கர்கள், தங்கள் செல்போனுக்கு தேவைப்படும் போது சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அந்த வசதி தற்போது இரண்டு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் பெரிதாகவும், மணி பர்ஸுக்குள் மடித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை அமெரிக்காவில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

April 2, 2016

சாம்சுங் நிறுவனத்தின் புதிய Galaxy A9 Pro

Samsung நிறுவனமானது Galaxy A9 Pro எனும் புத்தம் புதிய Smart Phone இனை வடிவமைத்துள்ள நிலையில் விரைவில் சீனாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
க் கைப்பேசியானது 6 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Touchscreen இனைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 652 Processor, Main Memory ஆக 4GB RAM, 32GB Storage Memory 
என்பவற்றினைக் .கொண்டுள்ளது
இவை தவிர 16 Megapixel களை உடைய பிரதான camera, 5000 mAh Battery, Android 6.0.1 Marshmallow இயங்குதளம் என்பவற்றினையும் 
உள்ளடக்கியுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



March 30, 2016

இச்செய்தி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அறிந்திடுவோம்?

.வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் நலன்கருதி புதிய வடிவமைப்பில் புதிய அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இனி வாட்ஸ் அப் மூலம் டெக்ஸ்ட் செய்யும் போது அவற்றை Bold, Italics வகையில் வடிவமைக்கலாம். மேலும் சில அம்சங்களும் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
ஆம் வாட்ஸ் அப் 
சில நாட்களுக்கு முன்னர், வெளியிட்ட அப்டேட்களில் மேம்படுத்தப்பட்ட புகைப்பட பகிர்வு, ஆவணப் பகிர்வு, விடியோ ஜூம் உள்ளிட்ட சில அம்சங்களை அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில் இன்று தனது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப், அதில் டெக்ஸ்ட் செய்யும் அனுபவத்தை மேலும் மெருகேற்றியுள்ளது. 
Bold & Italics: வாட்ஸ் அப்-பில்
 இனி நாம் டெக்ஸ்ட்டுகளை Bold மற்றும் italics வகையிலும் எழுதலாம், இதன் மூலம் நம் நண்பர்களுக்கு எழுதும் டெக்ஸ்டுகளில் சில முக்கியமானவற்றை மட்டும் தனித்துவமாக காட்ட இந்த புதிய அம்சம் உதவுகிறது. எவ்வாறு இதனை உபயோகிப்பது? ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு சொற்றொடரையோ bold ஆக மாற்ற எண்ணினால், அந்த சொற்றொடருக்கு முன்பாகவும், பின்பாகவும் Asterisk-ஐ (*) பயன்படுத்த வேண்டும், 
அதைப்போல 
underscore பயன்படுத்தினால் அந்த எழுத்துகள் அனைத்தும் italics ஆக வடிவம் பெற்றுவிடும். கூகுள் டிரைவ் மூலம் ஆவணம் அனுப்புதல்: தற்போது வாட்ஸ் அப்பில், கூகுள் டிரைவ் மூலமாக டாக்குமெட்களை அனுப்ப இயலும். இனி, உங்களது கூகுள் டிரைவில் உள்ள word file, pdf, powerpoint உள்ளிட்ட ஆவணங்களை வாட்ஸ் அப்பில் இணைத்து உங்களது நண்பர்களுக்கு அனுப்பலாம், இதனால் நமது அலுவலக பறிமாற்றங்கள் 
சுலபமாகின்றன
. resume உள்ளிட்டவைகளைக் கூட இனி சுலபமாக அனுப்பலாம். பேக் அப் நேரம்: இனி வாட்ஸ் அப் உரையாடல்களை பேக் அப் செய்யும் போது, அதனை சதவீதத்தில் காண இயலும். இதனால் நாம் செய்யும் பேக் 
அப் எவ்வளவு 
நேரத்தில் முடியும் என்று கணக்கிட உதவுகிறது. இப்புதிய அம்சங்கள் அனைத்தும் 2.12.535 எனும் அப்டேட் முலமாக நமக்கு கிடைக்கும் - 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




December 9, 2015

தண்ணீ்ரை ஒரே நிமிடத்துல மாயமாக்கும் வடிகட்டி!!!


பொதுவாகவே நம்ம ஊரில்  மழை என்றல் வீதியில் தேங்கி  நிற்க்கும் தண்ணீர் போவதற்கு எப்படியும் ஒரு வாரம் ஆகிவிடும் தண்ணீர் நிற்பதால் பதை  குண்டும் குழியுமாக இருக்கும் .அனால் இங்கு  என்ன எடைபெருகிறது பாருங்க .
பிரிட்டிஷ்ல் நாட்டில் Lafarge Tarmac என்னும் நிறுவனம் ஒரு தார் வடிகட்டி கண்டுபிடித்துள்ளது .அது என்ன செய்கிறது என்றால் 1 நிமிடத்தில் 4000 லிட்டர் தண்ணீர் உறிஞ்சிவிட உதவுகிறது.
இது உருவாக்கியதற்கு காரணம் எவ்வளவு மழை வந்தாலும் ஒரே நிமிடத்தில் தரயில் இருந்து தண்ணீரை உறிஞ்சிவிடும் மழையால் வீதியில் எந்த ஒரு சேதமும் ஏற்படாது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
mmmmm

July 23, 2014

அதிகளவு மின்சக்தியை பெற உதவும் திட்டம்

 
[ வீடுகள், வர்த்தக நிலையங்களில் மீண்டும் மீண்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையிலும் உலகின் மிகப்பெரிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சூரிய சக்தி மற்றும் காற்று என்பவற்றின் மூலம் கலப்பு முறையில் வருடாந்தம் 106,000 kWh மின்சக்தியை உற்பத்தி செய்யும் இத்திட்டத்தினை ஜமேக்காவின் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் நிறுவப்பட்டுள்ளது.
இதில் காற்றின் மூலம் 25kW மின்சக்தியும், சூரிய சக்தியின் மூலம் 55kW மின்சக்தியும் பெற்றுக்கொள்ள முடிவதுடன் முதலீடு செய்த தொகையை 4 வருடங்களுக்கு மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் 25 வருடங்களில் 2 மில்லியன் அமரிக்க டொலர்களை மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மற்றைய செய்திகள்
 
 
 
 

June 9, 2014

சோனியின் சிறிய அளவிலான OLED திரை அறிமுகம்

சமகாலத்தில் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கடிகாரம், இலத்திரனியல் கைப்பட்டி போன்ற சாதனங்களுக்கு அதிக அளவில் மவுசு காணப்படுகின்றது.

இதனால் சோனி நிறுவனம் 640 x 480Pixel உடையதும் 0.23 அங்குல அளவுகொண்டதுமான OLED திரையினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

70 டிகிரி அதி துல்லியமான பார்வைக்கோணத்தை உடைய இத்துணைச் சாதனத்தினைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நவீன தொழில்பங்களை உள்ளடக்கிய இலத்திரனியல் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

May 11, 2014

அசைவின் மூலம் இலத்திரனியல் சாதனங்களை கட்டுப்படுத்தும்?

மேஜிக் செய்பவர்களும், DJ க்களும் அதிகளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாதனம்தான் IK Multimedia iRing எனப்படும் புதிய இலத்திரனியல் சாதனம். இச்சாதனமானது iOS இயங்குதளத்தினைக் கொண்ட மியூசிக் அப்பிளிக்கேஷன்கள், மற்றும் எபெக்ட்களை தொடுகை இல்லாது கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் இடம்பெற்ற சர்வதேச இலத்திரனியல் மாநாட்டில் இச்சாதனம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த போதிலும் தற்போதே விற்பனைக்கு வரவுள்ளது. இதன் பெறுமதி 19.99 அமெரிக்க டொலர்களாகும்.
 

கணனியில் இருந்து வரும் பீப் ஒலி தெரிந்து கொள்வோம்:

கணனியில் ஒலிக்கும் பீப் ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.
 
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.
1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்
4 முறை பீப் சத்தம்:
டைமரில் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.
5 முறை பீப் சத்தம்:
ப்ராசசரில் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.
6 முறை பீப் சத்தம்:
கீ போர்டு, கீ போர்டு கண்ட்ரோலில் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.
7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.
8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.
11 முறை பீப் சத்தம்:
கேச் மெம்மரி சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.
1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
மெமரி தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணனி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.
தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
கணனி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.
1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.
1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்
3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.
இப்போது கணனியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணனியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
 

April 12, 2014

சுயமாகவே படமெடுக்கும் தொழில்நுட்பம் அறிமுகம் (காணொளி,)

தம்மை சுயமாகவே ஒவ்வொருவரும் புகைப்படம் எடுக்கக்கூடிய முகம் பார்க்கும் கண்ணாடிகளை iStrategy லேப் அறிமுகம் செய்துள்ளது. SELFIE Mirror எனும் இத்தொழில்நுட்பமானது சுயமாகவே ஒருவரது முகத்தினை அடையாளம் காணக்கூடியவாறும், அவரது சிரிப்பினை அடையாளம் கண்டு புகைப்படம் எடுக்கக்கூடியவாறும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உட்பகுதியினுள் Apple Mac Mini சாதனம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

March 29, 2014

பேஸ்புக் வாங்குகிறது Oculus நிறுவனத்தை

வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஆக்குலஸ் நிறுவனத்தை வாங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஜாம்பவனாக திகழும் பேஸ்புக், சமீபகாலமாக நவீன தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் கடந்த பிப்ரவரி 19ம் திகதி வாட்ஸ் ஆப் நிறுவனத்தை வாங்கியது. இந்த வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட ஒரு மாதத்தில் ஆக்குலஸ்(Oculus) நிறுவனத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளது. வீடியோகேமிற்கான விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்(Virtual Reality Headset) தொழில்நுட்ப பணிகளை நிறைவேற்றி வருகிறது, இந்த நிறுவனம் அமெரிக்காவில் இருக்கிறது.

இந்நிறுவனத்தை ரூ.12 ஆயிரம் கோடிக்கு வாங்குவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இதில் ஒரு பகுதி பணமாகவும், ஒரு பகுதி பங்குகளாகவும் வழங்கப்படும் என்றும் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற நவீன தொழில்நுட்ப சேவைகளை வாங்கி அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால், வரும் காலங்களில் சமூக இணையதளத்தின் மூலம் மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் என்று பேஸ்புக் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் தெரிவித்துள்ளார்.

 

March 7, 2014

அப்பிள்வெளியிடும் கார்களில் பயன்படுத்தக்கூடிய சாதனத்தை

கார்களில் பயன்படுத்தக்கூடிய CarPlay எனும் சாதனத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சியில் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், குறுந்தகவல்களை அனுப்புதல், மேப் சேவையினைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இத்தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதற்காக பிரபல்யமான Land Rover, BMW, Jaguar, Hyundai, Ford, GM, Peugeot Citroen, Honda போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களுடன் அப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

February 24, 2014

இலைகளில் வாழும் குள்ள பச்சோந்திகள்

ஆட்காட்டி விரலை விட மிகச்சிறிய இந்த பச்சோந்தி டோக்கியோ நகரில் உள்ள சன்ஷைன் இன்டர்நேஷனல் அக்குவாரியத்தில் இருக்கிறது. இது உலகிலேயே மிக அபூர்வமான புருக்ஷியா மினிமா என்று இலைப் பச்சோந்தி வகையை சேர்ந்தது. இந்தப் பச்சோந்தியின் நீளம் 3 சென்டி மீட்டர்தான், எடை 8 கிராம், அதிபட்சமாக 5 சென்டி மீட்டர் நீளம் வளரும், இவை மடாஸ்கர் தீவில் வசிக்கின்றன. பெரும்பாலான பச்சோந்திகள் மரத்தின் கிளைகளில் தான் வசிக்கும். ஆனால் இதன் வசிப்பிடமே இலைகள் தான். இலைகளில் வந்து உட்காரும் பூச்சிகள் இவற்றின் முக்கிய உணவாகும். இரையை பிடிப்பதற்காகவும், இந்த இனப் பச்சோந்திகள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. நிறம் மாறும் காரணம் பச்சோந்தி எதையாவது கண்டு கோபம் கொள்ளும் போது அச்செய்தி நரம்புகள் மூலமாக இதன் செல்களுக்கு எட்டுகிறது. உடனே அந்த செல்கள் கறுப்பாகி விடுகின்றன. பயமோ, பரபரப்போ ஏற்படும்போது அச்செய்தியை ஏற்றுக்கொண்ட செல்களில் நிறம் மங்கலாகவோ, மஞ்சள் புள்ளிகளாகவோ மாறுகிறது. சூரிய ஒளியும், பச்சோந்தியின் நிறமாற்றத்திற்கு துணை செய்கிறது. சூரிய ஒளி இல்லாத வெப்பமான சூழ்நிலை இதன் நிறத்தை பச்சையாக்குகிறது