குரூப் வீடியோ கால் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடந்த அந்நிறுவன கூட்டத்தில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒரே நேரத்தில் வீடியோ கால் மூலம் 4 பேர் பேச முடியும் என கூறப்படுகிறது.
எனினும், இந்த வசதி எப்போது அறிமுகமாகும் என்பதை, அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
அதேபோல், பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில், வாட்ஸ் அப் செயலியில் புதிய ஸ்டிக்கர்களை விரைவில் பார்க்கலாம்.
உலக அளவில் வாட்ஸ் அப் செயலியை 100 கோடிக்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் நாள்தோறும் 20 கோடி பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
No comments:
Post a Comment