siruppiddy nilavarai.com navarkiri.net

March 29, 2014

பேஸ்புக் வாங்குகிறது Oculus நிறுவனத்தை

வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஆக்குலஸ் நிறுவனத்தை வாங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஜாம்பவனாக திகழும் பேஸ்புக், சமீபகாலமாக நவீன தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் கடந்த பிப்ரவரி 19ம் திகதி வாட்ஸ் ஆப் நிறுவனத்தை வாங்கியது. இந்த வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட ஒரு மாதத்தில் ஆக்குலஸ்(Oculus) நிறுவனத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளது. வீடியோகேமிற்கான விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்(Virtual Reality Headset) தொழில்நுட்ப பணிகளை நிறைவேற்றி வருகிறது, இந்த நிறுவனம் அமெரிக்காவில் இருக்கிறது.

இந்நிறுவனத்தை ரூ.12 ஆயிரம் கோடிக்கு வாங்குவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இதில் ஒரு பகுதி பணமாகவும், ஒரு பகுதி பங்குகளாகவும் வழங்கப்படும் என்றும் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற நவீன தொழில்நுட்ப சேவைகளை வாங்கி அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால், வரும் காலங்களில் சமூக இணையதளத்தின் மூலம் மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் என்று பேஸ்புக் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment