மலேசியாவில் கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள Samsung Galaxy S5 ஆனது இம்மாதம் 27ம் திகதி மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கடந்த மாதம் பார்சிலோனாவில் இடம்பெற்ற 2014ம் ஆண்டிற்கான மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் மாநாட்டில் இக்கைப்பேசியானது, ஏப்ரல் 11ம் திகதி 150 நாடுகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இக்கைப்பேசியானது 5.1 அங்குல அளவுடைய தொடுதிரை, 2.5GHz வேகம் கொண்ட Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும், சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவினையும் கொண்டுள்ளது.
இதில் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment