siruppiddy nilavarai.com navarkiri.net
Showing posts with label கைத்தொலைபேசிச்செய்தி. Show all posts
Showing posts with label கைத்தொலைபேசிச்செய்தி. Show all posts

August 14, 2020

ஸ்மார்ட்போன்களை நிலநடுக்கத்தை கண்டுபிடிக்கும் கருவியாக மாற்றும் கூகுள்

கூகுள் ஸ்மார்ட்போன்களை நிலநடுக்கத்தை கண்டுப்பிடிக்கும் கருவியாக மாற்றுகிறது.அதாவது ஆல்பபெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுள் அண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களில் 11-08-20. செவ்வாய்க்கிழமை முதல் உலகெங்கிலும் நிலநடுக்கங்களை கண்டறியத் தொடங்கியது.இந்நிலையில், பில்லியன் கணக்கான பயனர்களுக்கு அருகிலுள்ள நிலநடுக்கம் பற்றிய “ஷேக்அலர்ட்” எச்சரிக்கையை 
வழங்கிகுகிறது.
இது முதலில் கலிபோர்னியாவில் பயன்பாட்டிற்கு வெளிவருகிறது.ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் கலிபோர்னியா போன்ற நாடுகளில் நிலநடுக்க எச்சரிக்கைகளை தெரிந்து கொள்ள நில 
அளவை சென்சார்களைப் பயன்படுத்துகின்றன.இது நிலநடுக்கம் தொடங்குவதற்கு முன்பு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நிலநடுக்க விநாடிகளின் மையப்பகுதியிலிருந்து
 மக்களை விலக்கி வைப்பதன் மூலம் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை செய்வதற்கான கூகுளின் அணுகுமுறைகள் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், எச்சரிக்கைகள் முதன்முறையாக இந்தோனேசியா மற்றும் சில
 பாரம்பரிய 
சென்சார்களைக் கொண்ட பிற வளரும் நாடுகள் உட்பட பலரைச் சென்றடையும்.சில டேப்லெட்டுகள் (tablets) உட்பட 2.5 பில்லியனுக்கும் அதிகமான சாதனங்கள் கூகுளின் அண்ட்ரோய்ட் இயக்க முறைமையை இயக்குகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>

June 26, 2020

கைப்பேசி விரைவாக சார்ஜ் ஆகி நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க வழிகள்

செல்போனை இரவு நேரத்தில் சார்ஜ் செய்யும் போது விரைவில் மின்னேற்றம் ஆகலாம். குறிப்பாக பிளைட் மோடில் போடும்போது, செல்போனின் அனைத்துவித செயல்களும் நிறுத்தப்பட்டு விரைவில் சார்ஜ் செய்யப்படும். உங்களது எண்ணிற்கு அதிகமான
 அழைப்புகள் வருமே ஆயின், இந்த செயலை இரவில் மட்டுமே செயல்படுத்துவது நல்லது. போனில் உள்ள தேவையற்ற அப்ளிகேஷனை நீக்குவதாலும் ஓரளவு மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம்.
சிலர் இரவு முழுக்க செல்போனை 
சார்ஜ் செய்வதுண்டு. இப்போது வரும் செல்போன்களில், ஒருமுறை தேவையான ஆற்றலை சேமித்த பின்னர் தானகவே நிறுத்திக்கொள்ளும்படி சிப்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் செல்போன்களுக்கு எந்தவித 
பாதிப்பும் வராது.
இருப்பினும் மின் இணைப்பு தனது வேலையை தொடர்ந்து செய்வதால் மின்னாற்றல் வீணாகும். கைபேசியின் தரத்தை பொறுத்தே இந்த நிலை மாறுபடுகிறது. அதிகப்படியாக பேட்டரியின் ஆயுட்காலம்
 பாதிக்கப்படலாம்
மற்றொரு ஆபத்து என்னவென்றால், சார்ஜரில் உள்ள மின்மாற்றியில்(transformer) இரண்டு காயில்கள் இருக்கும். ஒன்று மின் இணைப்புடனும் மற்றொன்று செல்போனுடனும் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். மின் தூண்டுதல் விதிப்படி ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மின்னூட்டம் பாய்ந்து கொண்டிருக்கும். ஸ்விட்சை ஆப் செய்திருந்தாலும் சில மணித்துளிகள் ஒரு காயிலில்
 மின்னுட்டம் இருக்கும்.
இந்தநிலையில் செல்போன் கனெக்ட் செய்திருக்கும் போது, பேட்டரியின் ஆயுட்காலம் குறையலாம். ஸ்விட்சை ஆப் செய்தாலும் மறக்காமல் செல்போனை டிஸ்கனெக்ட் செய்யுங்கள். இதனால் என்னதான் தரமான பேட்டரியாக இருந்தாலும், மற்ற மின் சாதன பொருட்கள் 
பாதிப்பிற்கு உள்ளாகலாம்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



January 10, 2019

வருகிறது சாம்சங்? ரவுண்டு கட்டும் சியோமி, ஒப்போ, விவோ!

பொதுவாகவே பண்டிகை என்றால் அதிகம் கல்லாகட்டுவது ஸ்மார்ட்போன் நிறுவாங்கள்தான். தள்ளுபடி விற்பனை, கேஷ்பேக், இலவசங்கள் என பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் மீது 
ஆஃபர் வழங்கப்படும். 
இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு தென் கொரிய நிறுவனமான சாம்சங், சாம்சங் கேலக்சி எம்10 மற்றும் எம்20 ஆகிய போன்கள் வெளியிட திட்டமிட்டுள்ளது. இரண்டு மாடல் ஸ்மரட்போன்களும் பட்ஜெட் ரகங்கள்தான். 
தற்போதெல்லாம் பட்ஜெட் என்றாலே ஜியோமி, ஒப்போ, விவோ போன்ர பிரண்டுகள்தான் நினைவிற்கு வருகிறது. அதுவும், சாம்சங் நிறுவனத்தின் முக்கிய போட்டியாக இருப்பது
 சியோமி நிறுவனம். 
கடந்த தீபாவளி விற்பனையின் போதுகூட சியோமி ஸ்மார்ட்போன்களே அதிகம் விற்பனை ஆனாது. இதனால், இந்த முரை சாம்சங் தனது விறபனியில் தாக்குபிடிக்குமா என்ற கேள்வி
 எழுந்துள்ளது. 
சாம்சங் வெளியிடும் கேலக்சி எம் 10 மாடல் போன் ரூ.9,500 மற்றும் எம்20 ரூ.15,000 என்ற விலையில் விற்பனையாகும். இவை தவிர எம்30 மாடலும் வெளியாக உள்ளது என தெரிகிறது. 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


November 6, 2018

மடிக்க கூடிய மோபைல் போன் வந்து விட்டது ஆப்பிள் சாம் சுங் அதிர்ச்சியில்

பேர்சை போல மடித்து வைக்க கூடிய மோபைல் போனை, சீன நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெரும் ஜாம்பவான்களான ஆப்பிள் மற்றும் சாம் சுங் ஆகிய நிறுவனங்கள்
 மடிக்க கூடிய மோபைல் போனை செய்து பாவனையில் விட பல ஆராட்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த 2 நிறுவனங்களுக்கும் தண்ணி காட்டி, சீன நிறுவனம் தற்போது இதுபோன்ற மோபைல் போனை முதல் தடவையாக பாவனையில்
 விட்டுள்ளார்கள்.
இதன் காரணத்தால் ஆப்பிள் மற்றும் சாம் சுங் ஆகிய நிறுவனங்கள் வெகு விரைவில் தாமும் தமது தயாரிப்பை வெளியே விடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


February 6, 2018

ஸ்மார்ட்போன்: வெளியிடும் மூன்று பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய்

 ஹூவாய் நிறுவனம்  மூன்று பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை  விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 ஹூவாய் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஹூவாயின் அடுத்த P-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகி வருகிறது
ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படலாம் என ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூவாய் P20 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவு மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மூன்று கேமராக்கள் வழங்கும் பட்சத்தில் மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஹூவாய் பெறும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் P11 அல்லது P20 என அழைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாவகே உள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய P-சீரிஸ் ஸ்மார்ட்போனில் 40 எம்பி பிரைமரி கேமரா அமைப்பு, 5X ஹைப்ரிட் சூம், 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இவற்றை லெய்கா தயாரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் ஹூவாய் மேட் 10 ப்ரோவை விட சிறியதாக இருக்கும் என்றும் இதில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை இயக்கும் கிரின் 970 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் முந்தைய ஹூவாய் மேட் 10 ஸ்மார்ட்போனினை விட மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் பாயின்ட் கிளவுட் டெப்த் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவ்வகை கேமரா ஆப்பிளின் ட்ரூ டெப்த் கேமரா
 போன்றதாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

October 6, 2017

உலகின் முதல் :நான்கு கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு புதிய ஹானர் 9i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் மைமேங் 6 போன்று காட்சியளிக்கும் ஹானர் 9i சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

புதுடெல்லி:ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 9i என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. புதிய ஹானர் 9i ஸ்மார்ட்போன் கடந்த மாதம் 

சீனாவில் அறிமுகமான ஹூவாய் மைமேங் 6 மற்றும் முன்னதாக மலேசியாவில் அறிமுகமான ஹூவாய் நோவா 2i போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஹானர் 9i ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா மற்றும் டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபுல் வியூ டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
                
ஹானர் 9i சிறப்பம்சங்கள்:

– 5.9 இன்ச் ஃபுல் எச்டி, 1080×2160 பிக்சல் டிஸ்ப்ளே
– 2.36 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர்
– 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
– 13 எம்பி + 2 எம்பி செல்ஃபி கேமரா
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த EMUI 5.1
– 3340 எம்ஏஎச் பேட்டரி
ஃபுல் வியூ டிஸ்ப்ளே கொண்ட ஹானர் 9i ஸ்மார்ட்போனின் டூயல் கேமரா கொண்டு பொக்கே ஷாட் மற்றும் போர்டிரெயிட் உள்ளிட்டவை எடுக்க முடியும். ஹானர் 8 ப்ரோ போன்றே புதிய ஹானர் 9i ஸ்மார்ட்போனும் புகைப்படம் எடுத்தபின் ஃபோகஸ் மாற்றியமைக்கும் வசதிகளை கொண்டுள்ளது.

பிளாட்டினம் கோல்டு, நேவி புளூ மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் ஹானர் 9i ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஹானர் 9i ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹானர் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி 10,000 எம்ஏஎச் குவிக் சார்ஜ் பவர் பேங்க் ரூ.2,399க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹானர் பவர் பேங்க் சாதனத்தை ஹானர் ஆன்லைன் ஸ்டோரில் அக்டோபர் 28-ம் தேதி வரை ரூ.1,999 என்ற சலுகை விலையில் 
வாங்கிட முடியும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


August 7, 2017

அப்பிள் ஸ்மார்ட் கைப்பேசியான ஐபோன் 8 சிறப்பு கமராவுடன் அறிமுகமாகவுள்ள

அப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான ஐபோன் 8 இனை அறிமுகம் செய்யவுள்ளது.
மூன்று பதிப்புக்களாக வெளியாகவுள்ள இக் கைப்பேசி தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதாவது செல்ஃபி அல்லது வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவில் புதிய புரட்சியினை 
ஏற்படுத்தவுள்ளது.
இதன் கமெராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் 4K தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும், செக்கனுக்கு 60 பிரேம்கள் உடையதாகவும் இருக்கும் என தெரிகிறது.
தற்போது செக்கனுக்கு 30 பிரேம்கள் எனும் வேகத்திலேயே ஐபோன் கமெராக்கள் வீடியோக்களை பதிவு செய்கின்றன.
 புதிதாக அறிமுகம் செய்யப்படும் Apple A11 Processor ஆனது இதற்கான வினைத்திறனை வழங்கும்.
இந்த Processor முன்னையவற்றினை விடவும் 30 சதவீதம் அதிக வினைத்திறன் உடையதென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



December 4, 2016

நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கபோறீங்களா? இதை கவனிங்க!

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு பதில் ஆள் பாதி ஸ்மார்ட் போன் மீதீ என சொல்லும் அளவுக்கு ஸ்மார் போன்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் விரும்பி உபயோகபடுத்தும் பொருளாக ஸ்மார்ட் போன் இன்று மாறியிருக்கிறது.
ஸ்மார்ட் போன் என்பது கணினி போன்றதாகும். ஏனெனில் அதன் பயன்பாடு என்பது இணையத்தை சுற்றியே இருக்கும்.
இயங்குதளம் மூலமே ஸ்மார்ட் போன்கள் பயன்படுகிறது. ஆண்ட்ராய்ட் , விண்டோஸ்8, பிளாக் பெர்ரி, ஆப்பிளின் IOS என சில இயங்குதளங்கள் இருக்கின்றன.
உங்கள் பட்ஜெட்க்கு ஏற்ற ஸ்மார்ட் போன்களை தேர்ந்தெடுப்பதே புத்திசாலிதனமாகும்.
ஸ்மார்ட் போனில் முதல் தோற்றத்தை தருவது அதன் டிஸ்ப்ளே தான். ஸ்மார்ட் போன்களில் ஏறக்குறைய எல்லாமே தொடு திரை (Touch) வகைகள் தான். பட்டன் டிஸ்ப்ளே,தொடு திரை சேர்ந்தும்
 கிடைக்கிறது.
இயங்குதளங்களில் மிக அதிகம் பேர் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் தான். ஏனேன்றால் ஆப்பிள் IOS போன்றவற்றை விட இது விலை குறைவாகும் மற்றும் பல இலவச செயலிகளை கொண்டது 
ஆண்ட்ராய்ட்.
எடை குறைவாக உள்ள கைபேசி வாங்குவதே நலம். அது உபயோகபடுத்துவதற்கும் இலகுவாக இருக்கும்.
நினைவகம் (Memory) முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயமாகும். இது கணினி போலவே RAM, Internal Memory போன்றதோடு வருகிறது. Internal Memory குறைந்த பட்சம் 150 - 200 MB இருப்பது அவசியமாகும். மெமரி கார்ட் 32 GB வரை இருக்கலாம்.
கமெராவை பொருத்தவரை முன் பக்க கமெரா, பின் பக்க கமெரா என இரண்டும் சேர்த்து இருக்கும் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்க வேண்டும்.மெகா பிக்சல் அளவை பார்ப்பது அவசியமாகும் . இருட்டில் படம் பிடிக்க பிளாஷ் (Flash) வசதி முக்கியமாகும். அது போல வீடியோ காலிங் பண்ணுவதற்கு முன் பக்க கேமரா
 உபயோகபடுகிறது
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள ஸ்மார்ட் போனிற்கு தேவையான மின்சாரத்தை தருவது பேட்டரிகள். அதில் சில வகைகள் உண்டு. அதில் நாம் நல்லவற்றை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
ஸ்மார்ட் போன்கள் 3G, 4G வகையறாக்களை எனப்லெட் செய்யும் போன் தான என்பதை உறுதி செய்ய வேண்டும். அதே போல Wifi, Usb ,Gps, BlueTooth போன்ற வசதிகள் உள்ளதா என்பதை பார்ப்பது
 அவசியமாகும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

July 20, 2016

புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இன்னும் இரு மாதங்களில்!

இன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 அறிமுகமாகவுள்ளது.
இந் நிலையில் தற்போது குறித்த கைப்பேசி தொடர்பில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
இத் தகவலின்படி புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள கைப்பேசியில் உள்ளடக்கப்படும் மின்கலம் ஆனது 1960 mAh உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இக் கைப்பேசிகள் ஒரு முறை சார்ஜ் செய்ததன் பின்னர் நீண்ட நேரம் பாவனை செய்யக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6S மற்றும் iPhone 6S Plus ஆகிய கைப்பேசிகளில் 1715 mAh மின்கலமே தரப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
தவிர iOS 10 இயங்குதளம் மற்றும் 12 மெகாபிக்சல்களை உயைட கமெராக்களையும் கொண்டிருக்கும் என ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

December 20, 2015

அறிமுகமாகின்றது புதிய அம்சங்களுடன் Android 6.1 இயங்குதளம்

கூகுள் நிறுவனம் அண்மையில் Android Masmelos எனும் தனது இயங்குதளத்தின் ஆறாவது பிரதான பதிப்பினை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இதன் மற்றுமொரு பதிப்பாக Android 6.1 இனை அடுத்த வருடம் ஜுன் மாதமளவில் அறிமுகம் செய்ய
 தீர்மானித்துள்ளது.
இப்பதிப்பில் ஸ்கிரீன் மல்டி டாஸ்க்கிங் (Screen Multitasking) எனும் புதிய அம்சத்தினை உள்ளடக்கவுள்ளனர்.
இதன் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட திரையில் வெவ்வேறு அப்பிளிக்கேஷன்களில் பணியாற்றக்கூடியதாக
 இருக்கும்.
இது தவிர மேலும் சில அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை தொடர்பான தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

December 16, 2015

ஐபோன் 7விரைவில் அறிமுகம் waterproof உடன் கூடிய???

ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் பிளஸ் வெளியாகி 4 மாதங்கள் கூட முடியாத நிலையில் ஐபோன் 7 பற்றிய செய்திகள் பரபரப்பை ஏங்படுத்தி
வருகின்றன.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் பிளஸ் முற்றிலும் waterproof வசதியை கொண்டவை 
அல்ல.
ஆனால் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அனைத்து நிறுவனங்களுக்கும்
 ஏற்பட்டுள்ளது.
அதில் மிக முக்கியமான தொழில்நுட்பம் waterproof, தண்ணீர், புகை, தூசு போன்றவற்றிலிருந்து பாதிக்கப்படாத ஸ்மார்ட்போன்களுக்கு அதிக கிராக்கி உருவாகிவருகிறது.
இந்த நிலையில் முற்றிலும் waterproof உடன் கூடிய ஐபோனை உருவாக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் களமிறங்கி 
உள்ளது.
சுய சிகிச்சை முறையில் தன்னை மீள் உருவாக்கம் செய்துக்கொள்ளும் பொருட்களை (self-healing elastomer) கொண்டு waterproof ஐபோனை உருவாக்க அப்பிள் முயற்சித்துவருவது, அதன் காப்புரிமை தொடர்பான தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த ஐபோனின் சிறப்பம்சம் ஹெட்போன் போன்ற சாதனங்களை இதனுடன் இணைக்கும் போதும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அடைப்புகள் சற்று தளர்ந்து அதற்கு வழிவிடும்.
ஹெட்போனை அகற்றியவுடன் இது மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பி துளைகளை மூடிக்கொள்ளும். இந்த முறையானது போனை தண்ணீர், புகை, தூசு போன்றவற்றிலிருந்து காக்கிறது.
எனவே விரைவில் waterproof உடன் கூடிய புதிய அப்பிள் ஐபோன் 7 ஸ்மார்ட்போன் சந்தையை 
ஆகிரமிக்க கூடு
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

November 23, 2015

வினோத ஸ்மார்ட் கைப்பேசிகள் 2016 ஆம் ஆண்டை ஆக்கிரமிக்கப் வருகின்றது ?

பல்வேறு தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு 
காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அடுத்த வருடம் Samsung மற்றும் LG நிறுவனங்கள் OLED தொழில்நுட்பத்தினை உடையதும் மடிக்கக்கூடியதுமான திரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் சம்சுங் நிறுவனம் Snapdragon 820 Processor உடையதும் பிரதான நினைவகமாக 3GB RAM உடையதுமான ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
தவிர இக் கைப்பேசியில் அகற்ற முடியாத மின்கலம் மற்றும் நிலையான சேமிப்பு நினைவகம், microSD கார்ட் மூலம் அதிகரிக்கக்கூடிய நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாகவும் இக் கைப்பேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



April 9, 2015

கூகுளின் மாடுலர் ஸ்மார்ட் போன் வருகிறது (காணொளி இணைப்பு)


கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போனை தனித்தனி பாகங்களாக பிரித்து இணைத்துக் கொள்ளும் மாடுலர் ஸ்மார்ட் போனை (modular smartphone) தயாரித்து வருகிறது.
முன்னதாக இந்த திட்டம் மோட்டோரோலோவிடம் தான் இருந்தது. கூகுள் நிறுவனம் மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கிய பிறகு தற்போது இந்த திட்டத்துக்கு புதிய செயல் வடிவம் கொடுத்து வருகிறது.
போனில் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி இணைப்புகள் என மேற்பாகம் உள்ள ஸ்கிரீன் தவிர பிற பாகங்கள் அனைத்தும் இணைப்புகளாக உருவாக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு இந்த போனில் செயல்படும் கமெராவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து விடலாம்.
கமெராவின் திறன் அதிகரிக்க வேண்டும் என்றால், உதிரி பாகமாகக் கிடைக்கும் திறன் அதிகமாக உள்ள கமெராவை பொருத்திக் கொள்ளலாம்.
மேலும் போனில் ஏதேனும் பழுது என்றால் போனை கொடுத்துவிட்டு காத்திருக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட பாகத்தை கழற்றி வீசிவிட்டு வேறு பாகத்தை பொருத்தினால் போதும்.
இதில் இணைப்புகள் ஒன்றையொன்று சர்க்யூட்டுகள் (Circuit) மூலம் இணைக்கப்படுகிறது. போனில் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி இணைப்புகள் இருப்பதால் இது புதிய 
அனுபவத்தை கொடுக்கும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


December 22, 2014

ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் 6000 டொலர்கள்

Lamborghini's 88 Tauri -பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வெவ்வேறு நிறுவனங்கள் ஏட்டிக்கு போட்டியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றன. இவற்றின் வரிசையில் சுமார் 6000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஸமார்ட் கைப்பேசி ஒன்றும் இடம்பிடித்துள்ளது. ஆடம்பரமானதும், விலையுயர்ந்ததுமான லம்போகினி கார் வடிவமைப்பு நிறுவனத்தினை நிர்வகிப்பவரான Ferruccio Lamborghini என்பரது மகனினால் நடாத்தப்படும் நிறுவனம் ஒன்றே இக்கைப்பேசியை தயாரித்துள்ளது. 88 Tauri எனும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய Gorilla Glass தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 801 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது. இவற்றுடன் 20 மெகா பிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

December 4, 2014

போன்களின் விலைகள் சடுதியாக குறையும்!ஆய்வில் தகவல்

உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டித்  தன்மையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் சில வருடங்களில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015-ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சைனா ஸ்மார்ட்போன்களின் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருவதால் பிரீமியம் ஹேன்ட்செட்டுகளின் விலையும் கடுமையாக சரிந்து வருகின்றன.

தற்போது சர்வதேச சந்தையில் 80 சதவீதம் ஆண்ட்ராய்டு போன்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அப்பிளின் ஐ.ஓ.எஸ் 13 சதவீத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. எனினும், டைசன், பயர்பாக்ஸ் போன்ற புதிய ஓ.எஸ்.களும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுதான் வருகிறது.mm


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

July 29, 2014

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் தம்மை புகைப்படம் எடுத்து மகிழ்வது சாதாரண விடயமாகும்.
இதில் சில அந்தரங்கமான விடயங்களையும் புகைப்படம் எடுத்து பின்னர் அதனை அழித்து விடுவார்கள்.
ஆனால் அவ்வாறு அழித்த பின்னரும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து குறித்த படங்களை மீட்டெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக eBay தளத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 20 அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளில் Avast நிறுவனத்தின் விசேட மென்பொருள் ஒன்றினைப் பயன்படுத்தி 40,000 அந்தரங்க புகைப்படங்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அன்ரோயிட் மென்பொருளை உற்பத்தி செய்யும் கூகுள் நிறுவனம் 3.0 பதிப்பு பிந்திய இயங்குதளங்களில் அழித்த புகைப்படங்களை மீட்டெடுக்க முடியாது என தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று புதிய iPhone மற்றும் iPad களிலும் இதே பிரச்சினை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மற்றைய செய்திகள்
 

July 26, 2014

விரைவில் விற்பனைக்கு வரும் Samsung Galaxy Tab Q

சம்சுங் நிறுவனம் புதிதாக வடிவமைத்த Galaxy Tab Q டேப்லட் முதன் முதலாக சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதன் பின்னர் ஏனைய நாடுகளிலும் விற்பனைக்கு வரவுள்ள இந்த டேப்லட் ஆனது 7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை உட்டப 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3200mAh மின்கலம் என்பனவற்றுடன் வயர்லெஸ் தொழில்நுட்பங்களான Bluetooth, Wi-Fi ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
 
மற்றைய செய்திகள்
 

July 23, 2014

சோனி அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

 
இலத்திரனியல் சாதன உற்பத்திக்கு பெயர் போன சோனி நிறுவனமானது 22 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியமான கமெராவினை உள்ளடக்கிய புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
Android 5.0 L இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Sony Exmor RS எனும் இக்கைப்பேசியனது 6.14 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் 2.86GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய 64-bit Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
 
மற்றைய செய்திகள்

July 1, 2014

அறிமுகம் Samsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக

அண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்த சம்சுங் நிறுவனம், Galaxy Ace 4 எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இக்கைப்பேசி 4 அங்குல அளவுடையதும் WVGA TFT தொழில்நுட்பத்தினை கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்து.
மேலும் 3G மற்றும் 4G LTE வலையமைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்ட இருபதிப்புக்களாக கிடைக்கக்கூடியதுடன், 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, 512MB RAM, சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவு என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 5 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களுக்காக VGA கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.

 மற்றைய செய்திகள்

May 6, 2014

ஸ்மார்ட் கைப்பேசி 816 அறிமுகம்

 
ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனங்களுள் ஒன்றான HTC Desire 816 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

ஆசிய நாடுகளில் கடந்த பெப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இக்கைப்பேசியானது ரோமானியாவில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

405 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசி இரட்டை சிம் வசதியினைக் கொண்டுள்ளதுடன், 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution, 1.6GHz வேகத்தில் செயற்படக்கூடிய Snapdragon 400 Processor என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பிரதான நினைவமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.