உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டித் தன்மையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் சில வருடங்களில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2015-ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சைனா ஸ்மார்ட்போன்களின் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருவதால் பிரீமியம் ஹேன்ட்செட்டுகளின் விலையும் கடுமையாக சரிந்து வருகின்றன.
தற்போது சர்வதேச சந்தையில் 80 சதவீதம் ஆண்ட்ராய்டு போன்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அப்பிளின் ஐ.ஓ.எஸ் 13 சதவீத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. எனினும், டைசன், பயர்பாக்ஸ் போன்ற புதிய ஓ.எஸ்.களும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுதான் வருகிறது.mm
No comments:
Post a Comment