siruppiddy nilavarai.com navarkiri.net

April 9, 2015

கூகுளின் மாடுலர் ஸ்மார்ட் போன் வருகிறது (காணொளி இணைப்பு)


கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போனை தனித்தனி பாகங்களாக பிரித்து இணைத்துக் கொள்ளும் மாடுலர் ஸ்மார்ட் போனை (modular smartphone) தயாரித்து வருகிறது.
முன்னதாக இந்த திட்டம் மோட்டோரோலோவிடம் தான் இருந்தது. கூகுள் நிறுவனம் மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கிய பிறகு தற்போது இந்த திட்டத்துக்கு புதிய செயல் வடிவம் கொடுத்து வருகிறது.
போனில் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி இணைப்புகள் என மேற்பாகம் உள்ள ஸ்கிரீன் தவிர பிற பாகங்கள் அனைத்தும் இணைப்புகளாக உருவாக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு இந்த போனில் செயல்படும் கமெராவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து விடலாம்.
கமெராவின் திறன் அதிகரிக்க வேண்டும் என்றால், உதிரி பாகமாகக் கிடைக்கும் திறன் அதிகமாக உள்ள கமெராவை பொருத்திக் கொள்ளலாம்.
மேலும் போனில் ஏதேனும் பழுது என்றால் போனை கொடுத்துவிட்டு காத்திருக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட பாகத்தை கழற்றி வீசிவிட்டு வேறு பாகத்தை பொருத்தினால் போதும்.
இதில் இணைப்புகள் ஒன்றையொன்று சர்க்யூட்டுகள் (Circuit) மூலம் இணைக்கப்படுகிறது. போனில் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி இணைப்புகள் இருப்பதால் இது புதிய 
அனுபவத்தை கொடுக்கும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


No comments:

Post a Comment