ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் வாட்ச்சை விரைவில் வெளியிடப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
உலகின் நம்பர் 1 இடத்தில் அப்பிள் (Apple) நிறுவனம் இருந்த நிலையில், அதற்கு மிகப்பெரிய போட்டியாளராக சாம்சங் (Samsung) நிறுவனம் வந்தது.
இந்த நிலையில் தங்களது தயாரிப்பை சாம்சங் நிறுவனம் காப்பியடிப்பதாக அப்பிள் நிறுவனம் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் சாம்சங் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், அபராதத்தை செலுத்திவிட்டு தனது விற்பனையை தொடர்ந்து நடத்திவந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது.
இதைத் தொடர்ந்து சாம்சங் மீது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.
மேலும் ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் சாம்சங் நிறுவனம் சாதனை படைத்துவருவதை பார்த்த ஆப்பிள் நிறுவனம், தானும் ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch) தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணியில் தீவிரமாக இறங்கியது.
இருப்பினும் இந்த ஆண்டில் ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் சாம்சங் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 12 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்துள்ளது.
ஸ்மார்ட் வாட்சின் சராசரி விலை 189 டொலர் ( ரூ.11,800) ஆகும். இந்த மாதம் வெளியாகியுள்ள அப்பிளின் ஸ்மார்ட் வாட்ச்சினால் இந்த நிலை மாறக்கூடும்.
எது எப்படியாகினும், தனது புதிய ஸ்மாட் வாட்ச் உருவாக்கும் பணியை அதிரடியாக தொடங்கியுள்ளது சாம்சங்.
Samsung Galaxy Gear, Samsung Gear 2, Samsung Gear 2 Neo, Samsung Gear Live, Samsung Gear Fit, Samsung Gear S ஆகியவை வெளியாகியுள்ள நிலையில், இதே அம்சங்களுடன் வடிவமைப்பை மட்டும் மாற்றி புதிய ஸ்மார்ட் வாட்ச் வெளியிடும் பணியில் களமிறங்கி இருக்கிறது சாம்சங்.
இந்த புதிய ஸ்மாட் வாட்ச் பழைய Samsung Gear-ன் அம்சங்களை கொண்டிருப்பதால் இது அடுத்த Gear ஸ்மார்ட் போன் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் வடிவமானது வட்டமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.63 AMOLED திரை கொண்டுள்ளதாகவும், 25 மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமெராவை பொறுத்தவரை 1.9 Megapixel உள்ளது. இதில் தொலைபேசியை வெளியே எடுக்காமல் அழைப்புகளை செய்யவும் மற்றும் அழைப்புகளை பெற முடியும்.
மேலும், இதில் செய்திகள், பதிவு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்சிப்படுத்த முடியும்.
இந்த ஸ்மார்ட் வாட்ச் துருப்பிடிக்காத ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Visit : http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-4.html
ReplyDelete