siruppiddy nilavarai.com navarkiri.net

March 15, 2014

அதிரடி மாற்றம் அப்பிள் iOS 8 இயங்குதளத்தில்

அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளமான iOS இன் புதிய பதிப்பான iOS 8 இனை வடிவமைப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இவ் இயங்குதளத்தில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், Apple Maps, மற்றும் iTunes Radio அப்பிளிக்கேஷன் என்பவற்றிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது Game Center அப்பிளிக்கேஷனை இவ் இயங்குதளத்தில் முற்றாக நீக்கவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முந்தைய பதிப்புக்களில் காணப்பட்ட Game Center அப்பிளிக்கேஷன் இப் புதிய பதிப்பிலிருந்து நீக்கப்படுவதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் iOS 8 இயங்குதளமானது செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள iPhone 6 மற்றும் Apple iWatch ஆகியவற்றில் நிறுவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment