siruppiddy nilavarai.com navarkiri.net

March 15, 2014

அதிரடிச் சலுகைமைக்ரோசொப்ட் நிறுவனம்


மைக்ரோசொப்ட் நிறுவனமானது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான தனது Windows இயங்குதளத்தினை பல்வேறு கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றது.

இதன் போது குறித்த இயங்குதளத்திற்கான லைசன்ஸ் வழங்குவதற்கு குறிப்பிட்ட தொகையினை அறவிடுகின்றது.

எனினும் தற்போது இந்தியாவில் தனது இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு கைப்பேசிகளை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களுக்கு லைசன்ஸ்ஸினை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சில கைப்பேசிகளுக்கான விலை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment