siruppiddy nilavarai.com navarkiri.net

January 15, 2014

வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்


 முதன் முறையாக வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை LG நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

தற்போது LG Flex எனும் இக்கைப்பேசியினை ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் அன்லாக் செய்யப்பட்ட நிலையில் 690 யூரோவிற்கு கொள்வனவு செய்ய முடியும்.
6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 2.26GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Snapdragon 800 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment