siruppiddy nilavarai.com navarkiri.net

December 16, 2012

Google Nexus 4 கைப்பேசி மின்கலங்களி​ன் பாவனை பற்றிய ஒரு பார்வை

அப்பிளின் iPhone, மற்றும் Samsung Galaxy Nexus போன்றவற்றிற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கைப்பேசியே Google Nexus 4 ஆகும்.

இவை அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இதற்கிடையில் இக்கைப்பேசிகளில் இணைக்கப்பட்டுள்ள மின்கலங்களில் பாவனைக்காலம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி இக்கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் 2000mAh மின்கலமானது தொடர்ச்சியான அழைப்புக்களின் போது 14 மணித்தியாலங்களும் 17 நிமிடங்களும் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றன.
அத்துடன் இணையப்பாவனையின் போது 4 மணித்தியாலங்களும் 34 நிமிடங்கள், வீடியோக்களை செயற்படுத்தலின்போது 4 மணித்தியாலங்களும் 55 நிமிடங்களும் என்ற கால அடிப்படையில் தொடர்ச்சியான பாவனையினைக் கொண்டுள்ளது.






No comments:

Post a Comment