siruppiddy nilavarai.com navarkiri.net
Showing posts with label கணணி செய்தி. Show all posts
Showing posts with label கணணி செய்தி. Show all posts

December 3, 2022

உங்க கணனி ரொம்ப வேகமாக வேலை செய்ய இதை மட்டும் பண்ணிடுங்க

கணனிகள் வேகமாக செயற்பட வேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பதாக காணப்படுகின்றது.
அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் கணனியை வேகமாக்குவதற்கு சில ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உங்களது இணைய உலாவி அல்லது பிரவுசரில் பல்வேறு தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கின்றது.
ங்கள் பிரவேசிக்கும் இணைய தளங்கள், உங்களது கடவுசொற்கள், உலாவி வரலாறு, தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்புக்கள் என்பன பல தரவுகள் இவ்வாறு சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த தகவல்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் கணனியின் வேகம் குறைவடையும்.
இதனால் உலாவியின் கேச், கூக்கீஸ், மற்றும் காலத்திற்கு காலம் அழித்துவிடவேண்டும்.
கூக்கீஸ், கேச் மற்றும் இணைய வரலாறு நீங்கள் இணைய தளமொன்றக்குள் பிரவேசிக்கும் போது நீங்கள் கூக்கிஸ் பொப்அப் ஆவதனை அவதானித்திருப்பீர்கள்.
இந்த கூக்கீஸ் கோப்புக்கள் நீங்கள் பிரவேசிக்கும் இணைய தளங்களினால் உருவாக்கப்படுபவை.
நீங்கள் அடிக்கடி இணைய தளத்திற்குள் பிரவேசிக்கும் போது இலகுவில் பிரவேசிக்கும் நோக்கில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.
உலாவி கேச் பக்கங்களின் பகுதிகளை நினைவில் வைத்துக்
 கொள்கின்றது. இது உலாவியில் அடுத்த தடவை இணைய தளத்திற்கு பிரவேசிக்கும் போது வேகமாக லோட் செய்வதனை 
உறுதிப்படுத்துகின்றது.
நீங்கள் கடந்த காலங்களில் பிரவேசித்த இணைய தளங்களின் வரலாறு உலாவி வரலாறு என அழைக்கப்படுகின்றது.
இவற்றை அந்தரங்கமாக பேண வேண்டுமாயின் நீங்கள் கிளியர் ஹிஸ்ட்ரி ஆப்சனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
உலாவி கேச், கூக்கீஸ் மற்றும் வரலாறு என்பனவற்றை எவ்வாறு அழிப்பது உங்களது கணனியில் கூகுள் க்ரோமை திறக்கவும் பின்னர் வலதுபக்க மேல் மூலையில் காணப்படும் மூன்று டொட் குறியீட்டை அழுத்தவும்.
1. More Tools என்பதனை தெரிக Clear Browsing Data.
2. அனைத்து பெட்டிகளையும் அடையாளம் இடுக browsing history, download history, cookies மற்றும் other site data.
3. நீங்கள் Basic Settings ஐ கிளிக் செய்து அனைத்தையும் ரீசெக் செய்ய முடியும். பின்னர் time range என்ற ட்ரொப் டவுன் மெனுயுவை அழுத்தி உங்களுக்கு விருப்பமான வகையில் தெரிவு செய்ய முடியும். cache, ஐ கிளியர் செய்ய வேண்டுமாயின் All time என்பதனை கிளிக் செய்யவும்
4. இறுதியாக Clear data என்பதனை அழுத்தவும்
சப்பாரியில் (Safari)
1. நீங்கள் சப்பாரி பயன்படுத்தினால் டொப் மெனுயுவிற்கு சென்று என்பதனை தெரிவு செய்க அங்கு History > Clear History. என்பதனை அழுத்தவும்
2. தற்பொழுது எவ்வளவு காலத்திற்கு அழிக்க வேண்டும் என்பதனை தெரிவு செய்து Clear History என்பதனை கிளிக் செய்யவும்
. உங்களது அனைத்து உலாவி ஹிஸ்ட்ரியும் கேச்சும் அழிந்துவிடும்
மொஸிலாவில் (Mozilla Firefox)
1. மொஸிலாவை திறந்து வலதுபக்க மேல் மூலையில் hamburger menu என்பதனை தெரிவு செய்க
2. Privacy and Security என்னும் ஆப்சனை தெரிவு செய்க Cookies and Site Data ஸ்கோரல் செய்க
3. மொஸிலா க்ளோஸ் செய்யப்பட்டதும் அனைத்தையும் கிளியர் செய்க என்ற செக் பொக்ஸை தெரிவு செய்க (Delete cookies and site data when Firefox is closed) பின்னர் Clear Data என்பதனை தெரிவு செய்க ஒரு தடவை ஹிஸ்ட்ரி கிளியர் செய்யப்பட்டதன் பின்னர், இணைய தளங்களுக்கு பிரவேசிப்பதற்கு லொக் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





October 31, 2017

புதிய வகை மடிக் கணனிகள் மைக்கிரோசொவ்ற் தயாரிப்பில் அறிமுகம்!

கொரியர் என்னும் பெயரில்Microsoft நிறுவனம்  (மடிக்க கூடிய)  மடிக்கணணி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்து.
இந்த மடிக்கும் கணணி எதிர்வரும் வருடம் (2018) இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த கணணியை கைத்தொலைபேசி போன்று பயன்படுத்திக்
 கொள்ளலாம்.
அத்துடன், இது குறிப்புக்களை எடுப்பதற்கும் பயன்படும் என தெரியவருகின்றது. மேலும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை மூடப்போவதாக அறிவித்திருந்த நிலையில், தனக்கென பிரத்தியேக சந்தையில், இந்த மடிக்கும் கணணியை உருவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



August 2, 2016

கணிப்பொறிக் கடிகாரம்ஆப்பிள் தயாரிக்கின்றது

ஆப்பிள் நிறுவனத்தைப்பற்றி தினமும் பலவிதமான வதந்திகள் வருவது சாதரணமான உண்மைதான். ஐபோன் மற்றும் ஐபேட்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் அடுத்ததாக ஆப்பிள் டிவி தயாரிக்கப்போவதாக கடந்த வாரம் வதந்திகள் கிளம்பியது. அனால் தற்பொழுது அதுவும் உண்மை இல்லை என்கின்றனர் இந்த துறையில் உள்ள சில 
வல்லுனர்கள்.
மேலும் ஆப்பிள் அடுத்ததாக தயாரிக்கப்போவது கைக்கடிகாரம் தானாம். இதை சில நம்பத்தகுந்த வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.
இந்த ஆப்பிள் கடிகாரம் 1.5 அங்குல திரைகொண்ட ப்ளுடூத் வசதிகொண்ட கணினியாக செயல்படும். இதில் ஐஒஸ் இயங்குதளம் அடிப்படையாக இருக்கும். எனவே இது கணிப்பொறியின் சிறப்பம்சம்கள் கொண்ட கடிகாரமாக இருக்கும்.
இதை தயாரிப்பதற்காக ஆப்பிள், 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதன் தொழில்நுட்பக்கூறுகள்:
1.5 அங்குல OLED திரை,
ஐஒஸ் இயங்குதளம்,
தரமுள்ள புகைப்படங்கள்,
தற்பவெப்பம் சார்ந்த தகவல்கள்,
இன்னும் சில சிறப்பம்சங்களும் உள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

July 14, 2015

ASUS ZenPad 8 பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்

புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டினை பட்ஜெட் விலையில் எதிர்பார்ப்பவர்களுக்காக ASUS நிறுவனம் ZenPad 8 எனும் டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.
200 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட்டானது 8 அங்குல அளவு, 2048 x 1536 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad-Core Rockchip-Made Intel x3-C3200 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 5 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதியதாக விரைவில் அறிமுகமாகும் ஐப்பட்பு றோ

அப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய iPad Pro டேப்லெட்டினை விரைவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்து நொவம்பர் மாதமளவில் விற்பனைக்கு விடவுள்ளது.
12.9 அங்குல அளவு, 2732 x 2048 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் Apple A9X Processor பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர 256GB சேமிப்பு நினைவகமும் தரப்படவுள்ளது.  எனினும் இந்த டேப்லெட் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும்
 வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில் Apple A9X Processor ஆனது சிறந்த வினைத்திறன் உடையது எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகமாகவுள்ள iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றுடன் இந்த Processor அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

September 5, 2014

அறிமுகம் Asus செய்யும் புத்தம் புதிய டேப்லட்


 Asus நிறுவனமானது MeMo Pad 7 எனும் 1.83GHzவேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Intel Atom z3560 64-bit Processor இனை உள்ளடக்கிய புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டேப்லட் ஆனது பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 7 அங்குல அளவு, 1920 x 1200 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Android 4.4 KitKat இயங்குதளம், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

August 19, 2014

உங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா? இதோ மீட்க வழி

தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.
இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ். வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம்.
ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணனியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.
உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணனியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

July 1, 2014

அறிமுகம் சிறுவர்களுக்கான வங்கிச் சேவை - அப்பிளிக்கேஷன்

தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு பயனுள்ள சில சுதந்திரங்களை வழங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக ஒன்லைன் பணக் கொடுக்கல் வாங்கல்களில் அதிகளவான சிறுவர்கள் சுயமாகவே செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு Osper எனும் நிறுவனம் குழந்தைகளுக்கான ஒன்லைன் வங்கிச் சேவையையும், அதனை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக கையாளக்கூடிய அப்பிளிக்கேஷனையும் பிரித்தானியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதனை 8 தொடக்கம் 18 வரையான சிறுவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
முதல் வருடம் இச்சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், அதன் பின்னர் வருடத்திற்கு 10 பவுண்ட்ஸ் செலுத்தி கணக்கினை தொடர முடியும்.

மற்றைய செய்திகள்

May 1, 2014

இயங்குதளத்தினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்யும் Acer

இந்த வாரம் Acer நிறுவனம் Aspire Switch 10 எனும் தனது புதிய தயாரிப்பான விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.

10.1 அங்குல IPS தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் 2GB RAM மற்றும் 32 அல்லது 64 GB சேமிப்பு நினைவகம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் எடையானது 590 கிராம்களாக காணப்படுவதுடன் பெறுமதியானது 379 அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகின்றது.

இதனுடன் கீபோர்ட் ஒன்றும் இணைத்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

April 13, 2014

விரைவாக பரிமாற்றம் செய்யவும், பேக்கப் செய்யவும் உதவும் !!


ஒரு கணனியிலிருந்து மற்றுமொரு விண்டோஸ் கணனிக்கு தரவுகள் அல்லது கோப்புக்களை விரைவாகவும், இலகுவாகவும் பரிமாறுவதற்கு PCtransfer எனும் போர்டேபிள் மென்பொருள் உதவியாக காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் மூலம் கோப்புக்களை பேக்கப் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.
மேலும் இம்மென்பொருள் Windows XP, 7, மற்றும் 8 ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், புக்மார்க், ஸ்கைப் சட்டிங் கிஸ்ரி உட்பட புகைப்படங்கள், செட்டிங்ஸ் ஆகியவற்றினையும் பேக்கப் செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
 

March 31, 2014

தெரிந்து கொள்வோம்: Pendrive யை RAM ஆக பயன்படுத்தும் வழிமுறைகள்


கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம்.

 ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).

2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.

3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.

4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.

5.Performance window வில் advance க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.

6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.

7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.

8. set என்பதை click செய்யவும்.

9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.

இதன் இறுதியில் உங்கள் கனணியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

March 25, 2014

கணனியிலுள்ள தகவல்களின் பாதுகாப்பிற்கு உதவும் மென்பொருள்

இன்று கணனியில் உள்ள தகவல்களை ஹேக்கர்களிடமிருந்தோ அல்லது வைரஸ்களிடமிருந்தோ பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாட்டிற்கு GiliSoft Privacy Protector எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

இம்மென்பொருளானது Hackers, Virus, Trojan மற்றும் Spyware என்பனவற்றினால் உங்கள் கணினியில் உள்ள இரகசியத் தகவல்களை திருடப்படுவதை தடுக்கிறது.
 

March 17, 2014

கணனியில் உள்ள இரட்டிப்படைந்த கோப்புக்களை நீக்குவதற்கு

கணனியில் கோப்புக்களை கையாளும்போது அவை இரட்டிப்படையக்கூடிய(Duplicate Files) சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இவற்றினை தேடிப்பிடத்து நீக்குவதற்கு ஏற்படும் நேரவிரயத்தை தவிர்த்து இலகுவாகவும், விரைவாகவும் அக்கோப்புக்களை நீக்க DupeRAZOR எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இம்மென்பொருளானது எவ்விதமான கோப்பு இழப்பும் இன்றி தவறுதலாக இரட்டிப்படைந்த Driver கோப்புக்கள், இருமுறை தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்புக்கள் போன்றவற்றினை இலகுவாக நீக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
 

March 14, 2014

புதிய டேப்லட் அப்பிள் தயாரிப்பு போட்டியாக சம்சுங் களமிறக்கும்

 Samsung நிறுவனமானது அப்பிளின் Retina iPad Mini டேப்லட்டிற்கு போட்டியாக Galaxy TabPro 8.4 எனும் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குல அளவும், 2560 x 1600 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.3Ghz வேகத்தில் செயற்படவல்ல Quad Core Snapdragon 800 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

February 6, 2014

சம்சுங் அறிமுகப்படுத்தும் Galaxy Note Pro 12.2

சம்சுங் நிறுவனமானது Galaxy Note Pro 12.2 எனும் புதிய டேப்லட்டினை எதிர்வரும் 13ம் திகதி அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது. இச்சாதனத்தின் புகைப்படத்தினை டுவிட்டர் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 12.2 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது Quad Core Snapdragon 800 processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளதுடன், சேமிப்பு நினைவகமாக 32GB அல்லது 64GB தரப்படுகின்றது.

iOS 7.1 Beta 5 வெளியிடப்பட்டது

அப்பிள் நிறுவனமானது டெவெலொப்பர்களுக்கான புதிய பதிப்பான iOS 7.1 Beta 5 இனை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் iOS 7.1 Beta 4 இனை வெளியிட்டிருந்த நிலையிலேயே தற்போது மற்றுமொரு பதிப்பினை வெளியிட்டிருக்கின்றது.
இதில் கீபோர்ட் வடிவமைப்பு, iTunes Radio என்பவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் “Buy Album” எனும் பொத்தான் உட்பட சில புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தவிர அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் Siri அப்பிளிக்கேஷனை பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய குரல் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
 

February 1, 2014

விண்டோஸ் 8.1 பயனர் இடைமுகத்தின் படம் வெளியீடு


 மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான புதிய பதிப்பினை வெளியிடவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது அதன் பயனர் இடைமுகம் தொடர்பான ஸ்கிரீன் ஷாட் படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்புதிய பதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகளும் நீக்கப்பட்டுள்ளன.
விண்டோஸ் 8.1 இயங்குளத்திற்கான இப் புதிய பதிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 11ம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

மிகச் சிறிய டெக்ஸ்டாப் கணனியை அறிமுகப்படுத்தும் Asus


மிகவும் சிறிய அளவுடையதும் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுமான மினி டெக்ஸ்டாப் கணனியினை Asus நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Eee Box EB1037 எனும் வியாபாரக் குறியீட்டினைக் கொண்ட இக்கணனியானது 2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 8GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் சாதாரண கணனிகளை விடவும் 70 சதவீதம் மின் சக்தி சேமிப்பைக் கொண்ட இக்கணனியில் சேமிப்பு நினைவகமாக 320GB இருந்து 1TB வரை கொள்ளவுடைய வன்றட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
 

January 26, 2014

கணனியின் 30 வருட பூர்த்தியை கொண்டாடியது அப்பிள் (காணொளி,)


அப்பிள் நிறுவனம் தனது முதலாவது Mac கணனியை அறிமுகம் செய்து நேற்றுடன் 30 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
உலகளாவிய கணனி பாவனையாளர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற அப்பிளின் ஏனைய தயாரிப்புக்களுக்கு அடித்தளமாக விளங்கிய முதலாவது Mac கணனியான Macintosh 128k ஆனது 24th of January 1984 அன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.


இதேவேளை 30 வருட முடிவில் தற்போது Apple Mac Pro எனும் கணினியை அறிமுகம் செய்யவுள்ள அந்நிறுவனம் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
 

January 15, 2014

வளை மேற்பரப்பினைக் கொண்ட புதிய டேப்லட்


 டேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தொடர்ச்சியாக பல புரட்சிகளை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தற்போது வளை மேற்பரப்பினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி 8.4 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், Snapdragon 800 and Exynos 5 Octa Processor, 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 16 அல்லது 32GB கொள்ளளவினை கொண்டதாக காணப்படுகின்றது.

இவற்றுடன் Android 4.4 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் இதன் பெறுமதியானது 1000 டொலர்கள் வரை இருக்கலாம் என கொரிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.