தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு பயனுள்ள சில சுதந்திரங்களை வழங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக ஒன்லைன் பணக் கொடுக்கல் வாங்கல்களில் அதிகளவான சிறுவர்கள் சுயமாகவே செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு Osper எனும் நிறுவனம் குழந்தைகளுக்கான ஒன்லைன் வங்கிச் சேவையையும், அதனை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக கையாளக்கூடிய அப்பிளிக்கேஷனையும் பிரித்தானியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதனை 8 தொடக்கம் 18 வரையான சிறுவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
முதல் வருடம் இச்சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், அதன் பின்னர் வருடத்திற்கு 10 பவுண்ட்ஸ் செலுத்தி கணக்கினை தொடர முடியும்.
மற்றைய செய்திகள்
No comments:
Post a Comment