கணனி ஒன்றின் வன்பொருட்
பாகங்களையும்(Hardware), பிரயோக மென்பொருட்களையும்(Application Software) இணைத்து
செயலாற்றுவதில் Driver மென்பொருட்களின் பங்கானது இன்றியமையாததாக காணப்படுகின்றது.
இவ்வகையான மென்பொருட்களிலும் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்பட்டு, புதிய
அம்சங்கள் உள்ளடங்கலாக புதிய பதிப்புக்கள் வெளியாகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை இலகுவான முறையில் தரவிறக்கம் செய்து விண்டோஸ் இயங்குதளங்களைக் கொண்ட கணனியில் நிறுவிக் கொள்வதற்கு DriverUpdate எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 637 KB கோப்பு அளவு கொண்ட இம்மென்பொருளானது இணைய இணைப்பு உள்ள போது புதிதாக வெளியிடப்படும் Driver மென்பொருட்களை தானாகவே இனம்கண்டு அதனை Update செய்யும் வசதியினை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். |
November 16, 2012
விண்டோஸ் இயங்குதளத்திற்கான Driver மென்பொருட்களை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment