ஜப்பானில் நாடாளுமன்றம்
கலைக்கப்பட்டு, அடுத்த மாதத்திற்குள் விரைவில் தேர்தல் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் பல ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தி வந்த லிபரல் டெமாக்ரட்டிக்
கட்சியை மக்கள் பதவியிலிருந்து அகற்றினர். இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜப்பான் ஜனநாயக கட்சியால் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்ல முடியவில்லை. இந்நிலையில் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பாகவே, நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. இருப்பினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே அடுத்த மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் என்றும், இத்தேர்தலில் முன்னாளர் வலதுசாரி பிரதமர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. |
November 16, 2012
ஜப்பானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: விரைவில் பொதுத் தேர்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment