siruppiddy nilavarai.com navarkiri.net

January 26, 2023

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுபவர்களை பற்றிய ஓர் சிறந்த பதிவு ஒன்று

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுவது என்பது ஒரு சிறந்த செயலாக நான் கருதவில்லை.வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இன்னைக்கு நிறைய பேர் மத்தவங்களை இம்ப்ரஸ் பண்ண தான் போடுறாங்க…(நல்லவிதமா யூஸ் பண்ற உங்களுக்கு இதை நான் சொல்லல…)
மத்தவங்கள இம்பிரஸ் பண்ண செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் நம்மளுக்கு தோல்வியை தான் தரும்.முதல்ல நாம நம்மளை இம்ப்ரஸ் பண்ண கத்துக்கணும்…நம்மள யாரும் கவனிக்காத நிலைமையில் நாம் என்ன செய்கின்றோம் அதுதான் நம்முடைய சாதனை
இப்ப நான் நான் என்னோட பிரெண்ட்ஸ் நிறைய பேரை
 பார்த்து இருக்கேன்.. அவனுங்க ஒரு ஸ்டேட்டஸ் போடுவானுங்க வாட்ஸப்ல…போட்டு ஐந்து நிமிடம் கூட இருக்காது.. இந்த ஸ்டேட்டஸ் யார் யார் பார்த்து இருக்காங்க, யார் யார் பார்க்கல, பார்க்கவில்லை என்றால் நீங்க ஏன் பார்க்கல ஆன்லைன்ல தான் இருந்தாங்க ஏன் 
பார்க்கவில்லை…
இப்படி யோசித்து மன வியாதிக்கு ஆளாக கூடிய ஆட்கள் இருக்காங்க.சில பேர் இருக்காங்க சோகமா இருந்தா அம்மா ஸ்டேட்டஸ் அப்பா ஸ்டேட்டஸ் பாடல்கள் போடுவாங்க…ஆனா அவங்க அம்மாவுக்கும் 
அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி பேச மாட்டாங்க…அந்த ஸ்டேட்டஸ் பாடலை அவங்க அம்மாவும் அப்பாவும் பார்த்து
 இருக்க மாட்டாங்க.
அப்ப இதெல்லாம் யாருக்கு பண்றானுங்க..நீ ஒரு பாடலை தேடி அதை டவுன்லோட் பண்ணி வாட்ஸ் அப்ல ஒரு ஸ்டேட்டஸ் வைக்கிறது கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் வைத்துக் கொள்ளுங்களேன்…அந்தப் பத்து நிமிஷத்துல அவ கிட்ட போன் பண்ணி நீங்க பேசி விடலாமே.. அவளுக்கு 
நிறைய திருப்தி வருமே.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



December 3, 2022

உங்க கணனி ரொம்ப வேகமாக வேலை செய்ய இதை மட்டும் பண்ணிடுங்க

கணனிகள் வேகமாக செயற்பட வேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பதாக காணப்படுகின்றது.
அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் கணனியை வேகமாக்குவதற்கு சில ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உங்களது இணைய உலாவி அல்லது பிரவுசரில் பல்வேறு தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கின்றது.
ங்கள் பிரவேசிக்கும் இணைய தளங்கள், உங்களது கடவுசொற்கள், உலாவி வரலாறு, தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்புக்கள் என்பன பல தரவுகள் இவ்வாறு சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த தகவல்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் கணனியின் வேகம் குறைவடையும்.
இதனால் உலாவியின் கேச், கூக்கீஸ், மற்றும் காலத்திற்கு காலம் அழித்துவிடவேண்டும்.
கூக்கீஸ், கேச் மற்றும் இணைய வரலாறு நீங்கள் இணைய தளமொன்றக்குள் பிரவேசிக்கும் போது நீங்கள் கூக்கிஸ் பொப்அப் ஆவதனை அவதானித்திருப்பீர்கள்.
இந்த கூக்கீஸ் கோப்புக்கள் நீங்கள் பிரவேசிக்கும் இணைய தளங்களினால் உருவாக்கப்படுபவை.
நீங்கள் அடிக்கடி இணைய தளத்திற்குள் பிரவேசிக்கும் போது இலகுவில் பிரவேசிக்கும் நோக்கில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.
உலாவி கேச் பக்கங்களின் பகுதிகளை நினைவில் வைத்துக்
 கொள்கின்றது. இது உலாவியில் அடுத்த தடவை இணைய தளத்திற்கு பிரவேசிக்கும் போது வேகமாக லோட் செய்வதனை 
உறுதிப்படுத்துகின்றது.
நீங்கள் கடந்த காலங்களில் பிரவேசித்த இணைய தளங்களின் வரலாறு உலாவி வரலாறு என அழைக்கப்படுகின்றது.
இவற்றை அந்தரங்கமாக பேண வேண்டுமாயின் நீங்கள் கிளியர் ஹிஸ்ட்ரி ஆப்சனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
உலாவி கேச், கூக்கீஸ் மற்றும் வரலாறு என்பனவற்றை எவ்வாறு அழிப்பது உங்களது கணனியில் கூகுள் க்ரோமை திறக்கவும் பின்னர் வலதுபக்க மேல் மூலையில் காணப்படும் மூன்று டொட் குறியீட்டை அழுத்தவும்.
1. More Tools என்பதனை தெரிக Clear Browsing Data.
2. அனைத்து பெட்டிகளையும் அடையாளம் இடுக browsing history, download history, cookies மற்றும் other site data.
3. நீங்கள் Basic Settings ஐ கிளிக் செய்து அனைத்தையும் ரீசெக் செய்ய முடியும். பின்னர் time range என்ற ட்ரொப் டவுன் மெனுயுவை அழுத்தி உங்களுக்கு விருப்பமான வகையில் தெரிவு செய்ய முடியும். cache, ஐ கிளியர் செய்ய வேண்டுமாயின் All time என்பதனை கிளிக் செய்யவும்
4. இறுதியாக Clear data என்பதனை அழுத்தவும்
சப்பாரியில் (Safari)
1. நீங்கள் சப்பாரி பயன்படுத்தினால் டொப் மெனுயுவிற்கு சென்று என்பதனை தெரிவு செய்க அங்கு History > Clear History. என்பதனை அழுத்தவும்
2. தற்பொழுது எவ்வளவு காலத்திற்கு அழிக்க வேண்டும் என்பதனை தெரிவு செய்து Clear History என்பதனை கிளிக் செய்யவும்
. உங்களது அனைத்து உலாவி ஹிஸ்ட்ரியும் கேச்சும் அழிந்துவிடும்
மொஸிலாவில் (Mozilla Firefox)
1. மொஸிலாவை திறந்து வலதுபக்க மேல் மூலையில் hamburger menu என்பதனை தெரிவு செய்க
2. Privacy and Security என்னும் ஆப்சனை தெரிவு செய்க Cookies and Site Data ஸ்கோரல் செய்க
3. மொஸிலா க்ளோஸ் செய்யப்பட்டதும் அனைத்தையும் கிளியர் செய்க என்ற செக் பொக்ஸை தெரிவு செய்க (Delete cookies and site data when Firefox is closed) பின்னர் Clear Data என்பதனை தெரிவு செய்க ஒரு தடவை ஹிஸ்ட்ரி கிளியர் செய்யப்பட்டதன் பின்னர், இணைய தளங்களுக்கு பிரவேசிப்பதற்கு லொக் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





May 20, 2022

நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் செல்போன் பார்ப்பதால் என்ன நடக்கும் தெரியுமா

செல்போன் இல்லாமல் பலரால் ஒரு நொடி கூட இப்போதெல்லாம் இருக்க முடிவதில்லை. முக்கியமாக இரவில் தூங்க செல்வதற்கு முன்னர் மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம்.
இப்படி இரவில் தூங்கப் போகும் போது கூட மொபைல் போனை நோண்டலாமா? அது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி அலைகள் நமது உடலில் உள்ள மெலடோனின் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த மெலடோனின் தான் நாம் சீராக தூங்குவதற்கான ஹார்மோன் ஆகும். இதனால் தொடர்ந்து இரவு நேரங்களில் மொபைல் போன் பார்ப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்து தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி குறைந்த அலைநீளம் கொண்டது. இது கண்களில் வெகு நேரம் படும் போது கண்களில் உள்ள ரெட்டினா பகுதியை பாதிப்படையச் செய்கிறது.
தூங்க வேண்டிய சமயத்தில் தூங்காமல் மொபைலை பார்ப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிப்படையச் செய்கிறது. இந்த நீல நிற ஒளிகள் தூக்கமின்மை பிரச்சனை, கண் பார்வை குறைபாடு இவற்றை ஏற்படுத்தும் போது தானாகவே நீங்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறீர்கள்.

இந்த செல்போன்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சுகள் மூளையை பாதிக்கின்றன. இரவில் சரிவர தூங்காமல் இருப்பது உங்கள் மூளை செயல்பாட்டை குறைக்கும், பகல் நேரங்களில் தெளிவாக சிந்திக்க முடியாது. நினைவுபடுத்த முடியாது. நினைவாற்றல் தடுமாறும்.
இருட்டான அறையில் அல்லது இருட்டான சுற்றுப் புறங்களில் மொபைல் போனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் நீல நிற ஒளி உங்கள் கண்களுக்கு வலியையும் சோர்வையும் கொடுக்கிறது. இதுவே நீங்கள் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தால் சீக்கிரமே கண் பார்வையில் நிரந்தர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறவாதீர்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


February 20, 2022

உலகம் முழுக்கWhatsApp பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ள புதிய அப்டேட்

உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் தற்போது மிகவும் பயனுள்ள அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பயனர்கள் எளிய வகையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.  வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் குரல்களிலேயே தகவல்களைப் பதிவு செய்து அனுப்பும் வாய்ஸ் மெசேஜ்
 வசதியும் உள்ளது.
இந்நிலையில் இந்த வாய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய பயனுள்ள மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வாட்ஸ்அப்பில் யாராவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அவருடைய பெயரை கிளிக் செய்து, சேட் விண்டோவில் 
தான் அவர் அனுப்பிய மெசேஜ்ஜை பார்க்க முடியும்.
 ஒருவருடைய சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டால் வாய்ஸ் மெசேஜ் தானாக நின்றுவிடும். 
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் நாம் வாய்ஸ் மெசேஜ்ஜை பிளே செய்துவிட்டு, சேட் விண்டோவில் இருந்து வெளியே வந்தாலும் பின்புறத்தில் வாய்ஸ் பிளே ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஆடியோ ஃபைல்களையும் பிளே செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.ஓஎஸ் வெர்சன் 22.4.75 வைத்திருப்பவர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். ஒருவருடைய வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுக்கொண்டே பிறரிடம் சேட் செய்வதற்கு வசதியாக இந்த அம்சம் 
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது தரப்படும் என தகவல் வெளியாகவில்லை. அதேபோன்று வாட்ஸ் ஆப் வெப்பிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




October 23, 2020

எல்ஜி நிறுவனம் சுருட்டி வைக்கக்கூடிய தொலைகாட்சியை அறிமுகம் செய்துள்ளது

சுருட்டி வைக்கும் வசதி கொண்ட தொலைக்காட்சியை யை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி தொலைக்காட்சியை உலகில் முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.65 அங்குல கொண்ட இந்த டிவி, சிறிய பெட்டி ஒன்றை அடிதளத்தில் கொண்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப ஒளி, படங்களின் அடர்த்தி உள்ளிட்ட அளவுகளைத் தானாக மாற்றக்கூடிய வகையில் இந்த தொலைக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
ஓஎல்இடி ரக திரையை, Remote control மூலம் அந்த பெட்டிக்குள் சுருட்டி வைக்கும் வகையிலும் வெளியே எடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர நவீன கருவிகளில் உள்ள அத்தனை வசதிகளும் இந்த
 சுருட்டல் டிவியில் அடக்கம்.
திரையின் அளவை பொறுத்து 3 வித சேவைகளை வழங்கும் இந்த தொலைக்காட்சி, தென்கொரியாவில் முதல் முதலாக விற்பனைக்கு வந்துள்ளது.வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொருத்து
 மற்ற நாடுகளுக்கு இதை ஏற்றுமதி செய்ய எல்ஜி
 நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது நிர்மாணித்துள்ள விலை இலங்கை 
மதிப்பில் 11.066.994,00 ரூபாயாகும்/

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


August 26, 2020

அப்பிள் நிறுவனம் தண்ணீரில் மிதக்கும் வண்ணமயமாக கடைகளை உருவாக்கி சாதனை

 

தண்ணீரில் மிதக்கும் புதுவகையான பலூன் கடைகளை, அப்பிள் போன் நிறுவனம் தயாரித்து பரீட்சித்துள்ளது
.சிங்கப்பூரில் பல வீடுகளில் ஒளிரும் பலூன்களை செய்து பறக்க விடுவது வழக்கம். அந்த கலாச்சாரத்திற்கு அமைவாக, 
தண்ணீரில் மிகக்க கூடிய பலூன் போன்ற கடைகளை முதல் தடவையாக அப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.இக் கடைகள் 
சிங்கப்பூரில் உள்ள ஏரிகளில் மிதக்கிறது. 
இக் கடைகளுக்கு செல்ல மக்கள் முந்தியடிக்கிறார்கள். அது போக சிங்கப்பூர் மிகச் சிறிய நாடு. அங்கே இட நிலப்பரப்புக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. 
எனவே ஏரிகளில் கடைகளை உருவாக்கி சாதனை படைக்கிறது 
அப்பிள் நிறுவனம்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



August 14, 2020

ஸ்மார்ட்போன்களை நிலநடுக்கத்தை கண்டுபிடிக்கும் கருவியாக மாற்றும் கூகுள்

கூகுள் ஸ்மார்ட்போன்களை நிலநடுக்கத்தை கண்டுப்பிடிக்கும் கருவியாக மாற்றுகிறது.அதாவது ஆல்பபெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுள் அண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களில் 11-08-20. செவ்வாய்க்கிழமை முதல் உலகெங்கிலும் நிலநடுக்கங்களை கண்டறியத் தொடங்கியது.இந்நிலையில், பில்லியன் கணக்கான பயனர்களுக்கு அருகிலுள்ள நிலநடுக்கம் பற்றிய “ஷேக்அலர்ட்” எச்சரிக்கையை 
வழங்கிகுகிறது.
இது முதலில் கலிபோர்னியாவில் பயன்பாட்டிற்கு வெளிவருகிறது.ஜப்பான், மெக்ஸிகோ மற்றும் கலிபோர்னியா போன்ற நாடுகளில் நிலநடுக்க எச்சரிக்கைகளை தெரிந்து கொள்ள நில 
அளவை சென்சார்களைப் பயன்படுத்துகின்றன.இது நிலநடுக்கம் தொடங்குவதற்கு முன்பு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நிலநடுக்க விநாடிகளின் மையப்பகுதியிலிருந்து
 மக்களை விலக்கி வைப்பதன் மூலம் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை செய்வதற்கான கூகுளின் அணுகுமுறைகள் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், எச்சரிக்கைகள் முதன்முறையாக இந்தோனேசியா மற்றும் சில
 பாரம்பரிய 
சென்சார்களைக் கொண்ட பிற வளரும் நாடுகள் உட்பட பலரைச் சென்றடையும்.சில டேப்லெட்டுகள் (tablets) உட்பட 2.5 பில்லியனுக்கும் அதிகமான சாதனங்கள் கூகுளின் அண்ட்ரோய்ட் இயக்க முறைமையை இயக்குகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>