siruppiddy nilavarai.com navarkiri.net

February 20, 2022

உலகம் முழுக்கWhatsApp பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ள புதிய அப்டேட்

உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் தற்போது மிகவும் பயனுள்ள அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பயனர்கள் எளிய வகையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.  வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் குரல்களிலேயே தகவல்களைப் பதிவு செய்து அனுப்பும் வாய்ஸ் மெசேஜ்
 வசதியும் உள்ளது.
இந்நிலையில் இந்த வாய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய பயனுள்ள மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வாட்ஸ்அப்பில் யாராவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அவருடைய பெயரை கிளிக் செய்து, சேட் விண்டோவில் 
தான் அவர் அனுப்பிய மெசேஜ்ஜை பார்க்க முடியும்.
 ஒருவருடைய சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டால் வாய்ஸ் மெசேஜ் தானாக நின்றுவிடும். 
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் நாம் வாய்ஸ் மெசேஜ்ஜை பிளே செய்துவிட்டு, சேட் விண்டோவில் இருந்து வெளியே வந்தாலும் பின்புறத்தில் வாய்ஸ் பிளே ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஆடியோ ஃபைல்களையும் பிளே செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.ஓஎஸ் வெர்சன் 22.4.75 வைத்திருப்பவர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். ஒருவருடைய வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுக்கொண்டே பிறரிடம் சேட் செய்வதற்கு வசதியாக இந்த அம்சம் 
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது தரப்படும் என தகவல் வெளியாகவில்லை. அதேபோன்று வாட்ஸ் ஆப் வெப்பிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




No comments:

Post a Comment