siruppiddy nilavarai.com navarkiri.net

November 18, 2012

ஐ.நா மனிதஉரிமை பேரவையில் நட்பு நாடுகள் நீக்கம் - நெருக்கடிக்குள் இலங்கை

 
By.Rajah.ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சூழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, ஜேர்மனி, அயர்லாந்து, ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசாகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன.
இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, ரஸ்யா, கியூபா ஆகிய நாடுகள் அடுத்த ஆண்டில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்க மாட்டாது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.
இதன் போது இலங்கைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் நட்பு நாடுகளின் ஆதரவில்லாத இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இம்முறை பாகிஸ்தான் தெரிவாகியிருப்பது மட்டுமே, இலங்கைக்கு ஆறுதலளிக்கக் கூடிய ஒரே விடயம் என மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment