By.Rajah.காகிதம் போன்ற மெல்லிய அளவு
கொண்ட குண்டு துளைக்காத பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வி.வி.ஐ.பி.க்களின் வாகனங்கள், போர் தளவாடங்கள் போன்றவை குண்டு துளைக்காத
வகையில் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு தடினமான உலோகங்கள் பயன்படுத்தப்படுவதால், குண்டு துளைக்காத உடை அணிவதற்கு சிரமமான அளவில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள், தற்போது "நானோ" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, காகிதம் போன்ற மெல்லிய புல்லட் ப்ருப் பொருளை தயாரித்துள்ளனர். இது கண்ணாடி போன்று பளபளப்பாகவும், ரப்பரை போன்று வளையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இந்த மெல்லிய தன்மை வாய்ந்த புல்லட் ப்ருப் பொருள், துப்பாக்கி குண்டுகளை துளைக்க விடாமல் தடுப்பதை வெற்றிகரமாக சோதித்துள்ளனர் |
November 18, 2012
மிக மெல்லியதாக காகிதம் போன்ற புல்லட் பருப் கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment