siruppiddy nilavarai.com navarkiri.net

October 14, 2012

குழந்தைகளை கவரும் ரகசிய தீவு

Sunday, 14 October 2012, By.Rajah.
ஜி.கே.பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் Adventures in Secret World என்ற ஹாலிவுட் படத்தை தமிழில் ரகசிய தீவு என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.
ஹாலிவுட்டில் தயாரான இந்த படம் அங்கு வெளியாவதற்கு முன்பே தமிழில் (இந்தியாவில்) வெளியாகிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் அழியும் தருணத்தில் டைனோசர்களும் மனிதர்களும் வசித்த ஒரு தீவு பற்றிய கதைதான் ரகசிய தீவு படம்.
டைனோடோப்பியா என்ற தீவுக்கு வெளிச்சத்தை தருவது சூரியகாந்தி என்கிற விநோதமணி. ஒளிக்கற்றைகளைக் கொடுப்பதற்காக அல்லாமல் ராட்சத கழுகுகளிடமிருந்து அந்த கிராமத்தை காக்கும் இந்த சூரிய காந்தி மணி.
இது பற்றாக்குறையாகும் போது கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் இம்மணியைக் கொண்டு வந்து அந்த தீவை காக்க வேண்டும்.
இந்த பணியை இரு இளைஞர்களான கார்ல், டேவிட் ஆகியோர் செய்கிறார்கள்.
மனிதர்கள் பேசுவதைப் போல விலங்குகள் பேசுவது குழந்தைகளை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் ஏ. சீனிவாச மூர்த்தி வசனம் எழுத இ.எம்.நாகேஸ்வர ராவ் தொகுத்து வழங்க மார்கோ பிரம்பில்லா இயக்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment