siruppiddy nilavarai.com navarkiri.net

October 15, 2012

ஜெர்மனி கைவினை கலைஞர் போதையில் விட்டு

         
 

  Monday 15 October 2012.By.Rajah.  செனறகார் 2 ஆண்டுக்கு பின் கண்டுபிடிப்பு   ஜெர்மனியி ன் முனிச் நகரில் வசிக்கும் கைவினை கலைஞர் ஒருவர், கடந்த 2010ம் ஆண்டு பார் ஒன்றுக்கு சென்றுள்ளார். பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு மது குடித்தார். போதை தலைக்கேறியதில் காரை எங்கு நிறுத்தினோம் என்பது தெரியவில்லை. தட்டு தடுமாறி வீட்டுக்கு சென்று விட்டார்.
மறுநாள் போதை தெளிந்ததும், காரை மீண்டும் தேடினார். ஆனால், எங்கு நிறுத்தினார் என்பது அவருக்கு ஞாபகத்துக்கு வரவே இல்லை. வேறு வழியின்றி கார் காணாமல் போய்விட்டது என்று முனிச் நகர போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் காரை தேடி வந்தனர். ஆனால், கிடைக்கவில்லை. இந்நிலையில் 2 ஆண்டு கழித்து கைவினை கலைஞரின் கார் அநாதையாக ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த மாதம் போக்குவரத்து போலீசார் பல இடங்களில் ரோந்து சென்ற போது, கைவினை கலைஞர் சென்ற பாரில் இருந்து பல கி.மீ. தூரத்தில் கார் ஒன்று நிற்பதை பார்த்துள்ளார். காரில் ஒட்டியிருந்த சோதனை ஸ்டிக்கர் காலாவதியாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கார் யாருடையது என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் கைவினை கலைஞரின் கார் என்பது தெரிய வந்தது.
காரில் 40 ஆயிரம் யூரோ மதிப்புள்ள பவர் டிரில்லர், எலக்ட்ரிக் ஸ்குரூ டிரைவர் போன்ற கருவிகள் அப்படியே இருந்தன. இதனால கைவினை கலைஞர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்

No comments:

Post a Comment