siruppiddy nilavarai.com navarkiri.net

September 27, 2012

டொரண்டோவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு வீடுகள் சேதம்.



 
27.09.2012.By.Rajah.டொரண்டோ நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கட்டி முடிக்கப்படாத ஒரு வீட்டில் இன்று காலை திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டொரண்டோவில் Byng Avenue, near Danforth and Pharmacy avenues, என்ற இடத்தில் ஒரு பெரிய வீடு ஒன்று கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது. அந்த வீட்டின் உள்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ எரிந்ததோடு மட்டுமிலாமல் கேஸ் வாசனையும் சேர்ந்து வந்ததால், அந்த பகுதி மக்கள் மிகுந்த பயத்துடன் காணப்பட்டனர். தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் அருகில் வசிக்கும் Keith அவர்கள் நமது செய்தியாளரிடம் கூறும்போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தீப்பிடித்து எரிந்த வீட்டில் இருந்து வெளியே ஓடினார்கள் என்றும் அவர்கள் தான் இந்த தீவிபத்திற்கு காரணமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். கேஸ் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிவதாகதான் அந்த பகுதி மக்கள் நம்பினார்கள். ஆனால் அந்த வீட்டை கட்டிக்கொண்டிருக்கும் உரிமையாளர் இன்னும் முழுமையடையாத இந்த வீட்டில் மின்சாரம் மற்றும் கேஸ் கனெக்ஷ்ன் அளிக்கப்படவில்லை என்று கூறினார். இந்த தீ விபத்து காரணமாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது எவ்வித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு துறையினர் மிக வேகமாக சம்பவ இடத்திற்கு வந்து, முதலில் அருகிலுள்ள எட்டு வீடுகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். தீ அதிவேகமாக பரவியதால், மொத்தம் 60 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தீவிபத்தில் மொத்தம் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த தீவிபத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயம். தீவிபத்து குறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்

No comments:

Post a Comment