siruppiddy nilavarai.com navarkiri.net

September 28, 2012

யாழில் கோயில்களுக்கு பூ தூவவும் ஆரம்பித்துள்ளது சிங்கள விமானப்படை

         
 
Friday28September2012 12:By.Rajah.தமிழ் மக்கள் மீது குண்டு மழை பொழிந்து, சிறுவர்களையும் முதியவர்களையும் மற்றும் பெண்களையும் கொலைசெய்த இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி தற்போது கோயில்களுக்கு பூ தூவவும் ஆரம்பித்துள்ளது என்றால் நம்புவீர்களா ? ஆம் ! இது ஒன்றும் இலவசமாக நடைபெறவில்லை.

தமிழர்கள் பணத்தை எடுத்து, தமிழர்களைக் கொன்ற விமானப்படையினருக்கு கொடுத்து கோவில் மேல் பூ தூவச் சொல்கிறார்கள். இதனை எல்லாம் கண்களால் பார்க்கவேண்டிய கால கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரிய விடையம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோண்டாவில் கிழக்கு வல்லிபுர ஆலய தேர்த்திருவிழா நடைபெறும்போது திடீரென வந்த இந்த உலங்கு வானூர்தி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

பின்னர் பூ தூவிட்டுச் சென்றுவிட்டது. ஆஹா இப்ப சிங்கள விமானப்படையினர் நல்லவர்களாக மாறி இந்து மத பக்தர்கள் ஆகிவிட்டார்களா என்று மக்கள் எண்ணும் அளவு, பூ தூவியிருக்கிறது இந்த உலங்கு வானூர்தி. ஆனால் மேட்டர் வேறுவிடையம். இவ்வாறு பூ தூவ இலங்கை விமானப்படையினர் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாவைக் கோரியுள்ளனர். அதுமட்டுமா ? இக்கட்டணத்தை செலுத்தியதுடன் இருவர் நேரில் பலாலி சென்று குறித்த விமானப்படை உலங்கு வானூர்தியில் ஏறி ஆலயத்தை அடையாளம் காட்ட அதில் பயணித்துள்ளனர் என்றால் பாருங்களேன்.
சுமார் ஏழு தடைவகளாக சுற்றி சுற்றி விமானப்படை உலங்கு வானூர்தி பூக்களை தூவிய போதும் ஒரு இதழ் தானும் தேரின் மீது விழவில்லை. அண்மையில் நல்லூர் ஆலயத்தின் தேர் திருவிழாவிலும் விமானப்படை உலங்கு வானூர்தி குண்டுகளுக்கு பதிலாக மலர்களை தூவியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் இருந்து என்ன தெரிகிறது ? ஒன்று மட்டும் புரிகிறது ! போர் நடந்தால் குண்டுபோட்டு தமிழரை அழிப்போம் ! சமாதானம் என்றால் பூ தூவியாவது தமிழன் காசைக் கறப்போம் ! மகிந்தரின் சிந்தனையே தனி ! இதனைத் தொடர்ந்து இனி எத்தனை கோவில்கள் இதனைப் முன்மாதிரியாக எடுத்து பின்பற்றப்போகிறார்களோ தெரியவில்லை. இலங்கை விமானப்படையினருக்கு காசை அள்ளித்தரும் நல்ல பிசினஸ் ஒன்று கிடைத்துள்ளது

Related

No comments:

Post a Comment