Saturday29September2012.By.Rajah. எங்களுக்குச் சொந்தமான தீவுகளை ஜப்பான் அபகரித்துவிட்டது என்று ஐ.நா. சபையில் சீனா பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளது.
கிழக்கு சீன கடல் பகுதியில் உள்ள சில தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே பிரச்னை உள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னை இப்போது பெரிய அளவில் வெடித்துள்ளது. இதனிடையே தைவானும் அங்குள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் ஜப்பான் - சீனா பிரதிநிதிகள் இடையே வியாழக்கிழமை காரசார விவாதம் நிகழ்ந்தது.
இந்நிலையில ஐ.நா. சபையில் சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜிய்ச்சே, ஜப்பான் மீது பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியது: வழக்கத்துக்கு மிகவும் முரண்பட்ட வகையில் தனியார்கள் சிலரிடம் இருந்து சில தீவுகளை வாங்கிவிட்டதாக ஜப்பான் கூறிவருகிறது. தீவு விஷயத்தில் சீனாவுக்கு எதிராக ஜப்பான் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
எங்களுக்கு சொந்தமான தீவுகளை உரிமை கொண்டாடுவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை செய்த தவறுகளை ஜப்பான் திருத்திக் கொள்ள வேண்டும்.எங்களிடம் இருந்து பல தீவுகளை ஜப்பான் அபகரித்துக் கொண்டுவிட்டது. அதனை முழுமையாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்போது முதல் இப்போது வரை தீவுகள் விஷயத்தில் ஜப்பான் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானவை என்று சீன அமைச்சர் யாங் ஜிய்ச்சே கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்துள்ள ஜப்பான், "சீனாவின் குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை' என்று கூறியுள்ளது.
சீன தூதரகத்துக்கு தோட்டாக்கள்: இதனிடையே ஜப்பானில் உள்ள சீன தூதரகத்துக்கு கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டாக்கள் அடங்கிய பார்சல் ஒன்று தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் பிரதமர் யோஷிகிஹோ நோடா பெயரில் இந்த குண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்துமே உண்மையான துப்பாக்கி குண்டுகள்தான் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால் தாங்கள் எந்த பார்சலையும் அனுப்பவில்லை என்று ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கி குண்டு பார்சல் குறித்து போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment