
29.09.2012.By.Rajah.கம்பஹா இம்புல்கொட பிரதேசத்தில் நேற்று முன் தினம் அதிகாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமைக்கு விபத்தே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்த றுஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் நாட்டில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுக்கு முன்நின்று உழைத்தவர்கள் எனவும் அவர்களின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த மரணம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் நேற்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்தமை குறித்துச் சில தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை நேற்றுக் கம்பஹா வைத்தியசாலையில் இடம்பெற்றது. அதன்போது தலையில் பட்ட பலத்த காயத்தால் மரணம் சம்பவித்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்பாவி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் சில தரப்பினர் ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களை வெளியிடுவது கவலையளிக்கிறது. இவர்களுடைய கருத்துக்கள் அடிப்படை அற்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது
No comments:
Post a Comment