அப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள iPhone 6 கைப்பேசி தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
தற்போது இக்கைப்பேசியின் திரையானது Ultra Retina தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட திரையினைக் கொண்டதாக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர முன்னர் வெளியான iPhone 5S கைப்பேசியுடன் ஒப்பிட்ட பல்வேறு ஊகங்களும் வெளியாகியுள்ளன.
அதாவது iPhone 5S கைப்பேசியின் தடிப்பு 0.3 அங்குலங்களை உடையதாகக் காணப்பட்டது, ஆனால் iPhone 6 கைப்பேசியின் தடிப்பு 0.22 அங்குலங்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திரையில் அளவு 4.7 அங்குலங்களாகவோ அல்லது 5.5 அங்குலங்களாகவோ இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றுடன் 2.6GHz வேகம் கொண்ட A8 Processor இனை கொண்டதாக iPhone 6 விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment