siruppiddy nilavarai.com navarkiri.net

January 9, 2014

“பிட்ஸ்பின்“ நிறுவனத்தின் பயன்பாட்டை கைப்பற்றிய கூகிள் நிறுவனம் (காணொளி )

பிட்ஸ்பின் நிறுவனத்தின் ”ஆண்ட்ராய்டு அலார கடிகாரம்” பயன்பாட்டை கூகிள் நிறுவனம் வாங்கியுள்ளது.
“பிட்ஸ்பின்” நிறுவனம் சுவிசில் உள்ள சூரிஜ் நகரை மையமாக கொண்டு கணனி அறிவியலில் திறமைவாய்ந்த வல்லுநர்களால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் பயன்படுத்தி வந்த ”டைம்லி” என்ற ”ஆண்ட்ராய்டு அலார கடிகாரம்” ஸ்மாட்போன் பயன்பாடு ஆண்ட்ராய்டு கைப்பேசிகளிலும், டேப்லட்டுகளிலும் பயன்படுத்தபட்டதாகும்.
தற்போது கூகிள் நிறுவனம் இதை வாங்கியுள்ளதால் இதன் பயன்பாட்டை “கூகிள் பிளே” என்ற பயன்பாட்டின் மூலம் இலவசமாக பெறலாம்.

பிட்ஸ்பின் நிறுவனத்தின் இந்த “டைம்லி”பயன்பாடு அலாரமாக மட்டுமில்லாமல் ஸ்டாப் கடிகாரமாகவும் பயன்படுத்தப்படும் அழகிய கலவையை கொண்டதாகும்.

மேலும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பயன்பாடு வெளியிடப்பட்டது. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இப்பயன்பாடு ”கூகிள் பிளே ஸ்டோரின் மூலம் ஐந்து லட்சம் வாடிக்கையாளர்கள் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது பாராட்டபட வேண்டிய ஒன்றாகும்.

 

No comments:

Post a Comment