siruppiddy nilavarai.com navarkiri.net

December 11, 2013

Super AMOLED தொடுதிரையுடன் கூடிய டேப்லட்களை அறிமுகப்படுத்த காத்திருக்கும் சாம்சுங்


சாம்சுங் நிறுவனமானது 2014ம் ஆண்டில் Super AMOLED தொடுதிரைகளுடன் கூடிய டேப்லட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக முதலில் 7.7 அங்குலம், 8 அங்குலம் மற்றும் 10 அங்குல அளவுள்ள டேப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளதோடு, அடுத்த வருடம் சுமார் 100 மில்லியன் டேப்லட்களை தயாரித்து விற்பனைக்கு விட காத்திருக்கின்றது.

மக்கள் மத்தியில் சம்சுங் நிறுவன தயாரிப்புகளுக்கு பலத்த வரவேற்பு காணப்படுகின்ற நிலையிலேயே இவ்வாறான ஒரு முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

இதேவேளை 2014ம் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் இவை அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 

No comments:

Post a Comment