LG நிறுவனம் புதிதாக வடிவமைத்துள்ள G Pad 8.3 டேப்லட் ஆனது இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை 8.3 அங்குல அளவுடையதும் 1920 x 1200 Pixel Resolution உடையதுமான WUXGA தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
மேலும் 1.7GHz வேகம் கொண்ட Qualcomm Snapdragon 600 Processor, 2GB RAM என்பனவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு தரப்பட்டுள்ளது.
கூகுளின் பிந்திய பதிப்பான Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்டினை 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் விலையானது ஏறத்தாழ 300 டொலர்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment