May 11, 2013
விலையில் அறிமுகமாகும் அன்ரோயிட் டேப்லட்
கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Cube U35GT எனும் டேப்லட் ஆனது 200 அமெரிக்க டொலர்கள் என்ற குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
1.8GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB DDR3 RAM என்பனவற்றினைக் கொண்டுள்ள இச்சாதனத்தின் சேமிப்பு நினைவகமானது 16GB ஆகக் காணப்படுகின்றது.
மேலும் இவற்றின் திரையானது தொடுகை முறைத் தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன் 7.9 அங்குல அளவு மற்றும் 1024 x 768 Pixel Resolution உடையதாகவும் காணப்படுகின்றது.
இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள 10,000 mAh மின்னோட்டத்தினைக் கொண்ட மின்கலம் 4 தொடக்கம் 6 மணித்தியாலங்கள் வரை நீடித்து செயற்படக்கூடியதாக அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment