siruppiddy nilavarai.com navarkiri.net

May 11, 2013

அறிமுகப்படுத்தும் A120 Canvas ஸ்மார்ட்


மலிவான விலையில் தரமான கைப்பேசிகளை தயாரித்து அறிமுகப்டுத்தும் Micromax நிறுவனமானத தற்போது A120 Canvas எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
1920 x 1080 Pixel Resolution மற்றும் 5.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது கூகுளின் Android 4.2.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2GHz வேகத்தில் செயலாற்றும் Quad-Core Cortex A7 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு காணப்படுகின்றது. இச்சேமிப்பு நினைவகத்தினை 64GB வரை அதிகரிப்பதற்காக microSD கார்ட் வசதியும் தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 3.2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
370 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசிகளில் இரட்டை சிம் பயன்படுத்தும வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment