உலகின் பிரம்மாண்டமான ஒன்லைன் வியாபார சேவையை வழங்கிவரும் அமேஷான் தளமானது தற்போது 3D டிஸ்பிளேயுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசித் தயாரிப்பில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் சீன நிறுவனமான Foxconn உடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும் இவ்வருடத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டுப் பகுதியில் இக்கைப்பேசி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்ப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
4.7 அங்குல அளவுடைய தொடுதிரையுடன் கூடிய கைப்பேசியை வெளியிடவிருக்கும் அமேஷன் தளமானது ஏற்கனவே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இக்கைப்பேசிக்கும் மக்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது
No comments:
Post a Comment