siruppiddy nilavarai.com navarkiri.net

April 30, 2013

தமிழர்களின் மனங்களில் இடம்பிடிப்பாரா டக்ளஸ்

வட தமிமீழத்தில் தேர்தலை ஒன்றை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகின்றதுஇந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் யார் போட்டி இடுவது என்பது தொடர்பில் பல சர்சைகள் உருவாகியுள்ளது.
 எனினும் சிறிலங்கா அரசாங்கம் சார்பில் ஈபிடிபியின் செயலரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நிறுத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 தமிழர் தாயகப் பகுதியில் வெற்றி பெறுவதற்கு டக்ளஸ் தேவானந்தா நல்லதொரு வாய்ப்பைக் கொண்டுள்ளதால், அவரையே முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழு உத்தேசித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறியுள்ளன.
 டக்ளஸ் தேவானந்தாவை முதல்வர் பதவிக்கு நிறுத்துவதை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மத்திய குழுக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எனினும் டக்ளஸ் தேவானாந்தா ஆளும் கட்சியிலிருந்து தனித் போட்டிப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
 அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தயா மாஸ்டர் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment