வடகொரியா சமீபத்தில் தென்கொரியா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்து அதற்காக ஏவுகணைகளையும் அதன் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தியது.
ஆனால் தற்போது தாக்குதலுக்கு தயாராக வைத்திருந்த இரண்டு ஏவுகணைகளையும் வடகொரியா விலக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆசியாவின் வடக்குப் பகுதியில் நிலவிய போர் பதற்றம் குறைந்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், வடகொரியா ஏவுகணைகளை நகர்த்தியுள்ளது என்றும் அதனால் உடனடித்தாக்குதல் எதுவும் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது வரை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் நடவடிக்கை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை
No comments:
Post a Comment