siruppiddy nilavarai.com navarkiri.net

April 1, 2013

ஹெராயின் கப்பலில் கடத்தல்: வரலாற்று சாதனை?

கனடா ரோந்துப்படை கப்பல், இந்தியப் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு மீன் பிடிக்கப்பலை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி சோதனை நடத்தியுள்ளது.
அச்சோதனையில் நூறு மில்லியன் டொலர் மதிப்புள்ள 500 கிலோ ஹெராயின் அந்த மீன் பிடிக்கப்பலிருந்து பிடிபட்டுள்ளது.
நேற்று இச்செய்தியை அறிவித்த கனடாவின் பாதுகாப்புத் துறை இது குறித்து மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை உலக அளவில் இவ்வளவு அதிகமான விலை மதிப்புடைய போதைப் பொருள் பிடிபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment