பாகிஸ்தானின் மாஜி ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், நீதிமன்றத்தில் ஆஜரான போது அவர் மீது ஷூ வீசப்பட்டது.
முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி முஷாரப் 2009ம் ஆண்டு முதல் துபாயில் அரசியல் தஞ்சமடைந்தார்.
அவர் மீது பாகிஸ்தான் நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டாலும் அந்த வழக்குகளில் முஷாரப்புக்கு பிணையும் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த 24ம் திகதி கராச்சி சென்றார். மேலும் வரும் மே மாதம் நடக்கும் தேர்தலில் போட்டியிட முஷாரப் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை எடுத்துரைக்க அனுமதிக்க கோரியும் தனக்கு வழங்கப்பட்டுள்ள பிணையினை நீட்டிக்க கோரியும் சிந்து உயர்நீதிமன்றத்தில் முஷாரப் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை முஷாரப்பின் மகள் அய்லா ரசா தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சிந்து உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது ஆஜரான முஷாரப்பிற்கு 15 நாள் பிணையினை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜரான போது, அவரை எதிர்த்து சட்டத்தரனிகள் கோஷமிட்டனர்.
இதற்கிடையே திடீரென அவரை நோக்கி ஒருவர் ஷூ வீசினார். எனினும், அவர் மீது ஷூ படவில்லை.
இதற்கு முன்பு அமெரிக்கா மாஜி ஜனாதிபதி புஷ், ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நிஜாத் ஆகியோர் மீது ஷு வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment