ஸ்வீடன் நாட்டிடமிருந்து 22 JAS - 39 கிரைப்பன் போர் விமானங்களை வாங்கத் திட்டமிட்டு சுவிஸ் ராணுவம் நாடாளுமன்றத்தை நாடியுள்ளது.
ஆனால் சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவையின் பாதுகாப்புக் கொள்கை குழு JAS - 39 கிரைப்பன் போர் விமானங்களை வாங்குவதற்கு தேவையான 3.1 பில்லியன் ஃபிராங்க் தொகையை பெறுவது குறித்து விவாதங்கள் நிறுத்தி வைக்கும்படி தெரிவித்துள்ளது.
ஒகஸ்ட் மாதத்தில் இறுதியில் அடுத்த கூட்டம் கூடும் வரை இந்த நிறுத்திவைப்பு தொடரும் என்று பாதுகாப்புக் கொள்கை குழுவின் தலைவரான சாந்தல் கலாட்(Chantal Gallade) ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து, ஸ்வீடனிடமிருந்து போர் விமானங்களை வாங்க வேண்டும் என்றால் பல துறைகளிலும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைத்தாலும் மக்களிடம் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பில் போர் விமானம் வாங்க அனுமதி கிடைப்பது கடினமாகும்
No comments:
Post a Comment