தென்னிந்திய நடிகர்களும் இலங்கை நடிகர்களும் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அர்த்தமற்றது என்று ஜே.வி.பி குற்றம்சுமத்தியுள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
செயற்படுத்த வேண்டிய விடயங்களை கைவிட்டு ஒரு நாடு என்ற வகையில் தேவையற்ற விடயங்களில் அவர்கள் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியல் சார்ந்த விடயங்களில் கலைஞர்கள் தலையிடுவது மக்கள் சமூகத்தினரிடையே குரோதத்தை தோற்றுவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், தமது அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை மோதல்கள் இன்றி மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கையின் நடிகர்களில் ஒருவதாக ரவீந்திர ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கைக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ளும் தென்னிந்திய நடிகர்களின் திரைப்படங்களை திரையிடுவதை நிறுத்திவிட்டு கேரள திரைப்படங்களை வெளியிடுவதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று ராவணா பலய அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பான மகஜர் ஒன்று நேற்று தேசிய திரைப்பட கூட்டுத்தாபன தலைவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், தமது இயக்கம் இந்த கருத்தை ஆட்சேபிப்பதாக இலங்கை கலைஞர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் மாலினி பொன்சேகா தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment