siruppiddy nilavarai.com navarkiri.net

February 9, 2013

மரபணு மாற்றம் செய்த கோதுமைக்கு சுற்றுப்புறச் சூழல்


புஞ்சை நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் மரபணு மாற்றம் செய்து கோதுமையை பயிரிட வேண்டும் என்பதில் சூரிச் பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சூரிச் பல்கலைக்கழகத்தில் மரபணு மாற்றப் பயிர் ஆராய்ச்சி செய்ய ரெக்கென் ஹோல்ஸில்(Reckenholz) உள்ள அக்ரோஸ்கோல்(Agroscope) என்ற வேளாண் ஆராய்ச்சி மையம் ஆதரவளித்து வருகிறது. மேலும் பாதுகாப்பான ஒரு இடத்தை வேளாண் விஞ்ஞானிகளுக்கு அளிக்கவும் முன் வந்துள்ளது. ஆனால் இந்த ஆராய்ச்சியை இயற்கைக்கு எதிரான திட்டமிட்ட வஞ்சனை என்று சுற்றுப் புறச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மரபணு மாற்றம் செய்த பயிர்களால் மனிதர் மற்றும் விலங்குளின் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தெரியாத நிலையில் இந்த ஆராய்ச்சிகளை அனுமதிப்பது தவறு என்றும் மேலும் இதற்காக ஒரு ஒப்பந்தம் செய்திருப்பதையும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். இருப்பினும் சூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மரபணு மாற்றப் பயிர்கள் குறித்து ஆராய்ச்சி செய்தது தேசநலனுக்கு ஆபத்து விளைவிக்கும் செயலாகும் என்று குறிப்பிடுகின்றனர். மேலும் ரெக்கன்ஹோல்ஸ்( Reckenholz) மற்றும் புல்லி(Pully) ஆகிய ஊர்களில் உள்ள வயல்களில் இதுபோன்ற பயிர்களை பயிரிட்டபொழுது அவற்றைச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அழித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment