siruppiddy nilavarai.com navarkiri.net

February 9, 2013

கிரெடிட் சூஸி வங்கியின் இலாபம் குறைந்தது


சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூஸி வங்கியின் நிகர இலாபம் கடந்த 2012ம் ஆண்டில் 24% மாக குறைந்துள்ளது. AWP என்ற நிதிசெய்தி முகமையின் ஆய்வு 1.7 பில்லியன் ஃபிராங்க் அளவிற்கு இலாபம் குறையலாம் என்று கணித்திருந்தது. இந்த கணிப்பிற்கு மாறாக 1.4 பில்லியன் ஃபிராங் அளவிற்கு மட்டுமே இலாபம் குறைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்த வங்கியின் 6.37 மில்லியன் ஃபிராங்க் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் 2012ம் ஆண்டு இறுதியில் இதன் நிகர இலாபம் 397 மில்லியன் ஃபிராங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கிப் பணியாளரின் சம்பளம் 5% குறைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி வேறு விவரங்களை வங்கி தெரிவிக்க முன் வரவில்லை. வங்கியின் தலைமை நிர்வாகியான பிராடி டோகன்(Brady Dougan) கடந்த 2012ம் ஆண்டை மாற்றத்திற்கான ஆண்டாகக் குறிப்பிட்டுயிருந்தார். புதிய தேவைகளுக்கும், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கும் மற்றும் சந்தைச் சூழலுக்கும் ஏற்றப்படி தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும் 2013ம் ஆண்டு நல்ல நிதி நிலைமையோடு தொடங்கி இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment