கனடா நாட்டின் கடற்படையில் ஜெப்ரி டெலிஸ்லி(வயது 41) என்பவர் அதிகாரியாக பணியாற்றினார்.
அப்போது கடற்படை நடமாட்டம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பரிமாற்றம் செய்யப்பட்ட ரகசிய தகவல்களை கணனியில் இருந்து சேகரித்து ரஷியா தூதரகத்துக்கு கொடுத்தார்.
இதன் பிரதிபலனாக அவர் பல ஆயிரம் டொலர்களும், கிரெடிட் கார்டும் பெற்றுக்கொண்டார்.
இதையொட்டி அவர் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கனடா கோர்ட்டு அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது
No comments:
Post a Comment