இலண்டன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இதுவரை விற்கப்பட்ட மதுவின் அளவும் குடித்தவர்கள் கூறிய மதுவின் அளவும் ஒத்துப்போகவில்லை என்று கண்டுபிடித்துள்ளனர்.
இலண்டனில் ஆண்களுக்கு ஒரு வாரத்திற்கு 21 அலகும், பெண்களுக்கு 14 அலகும் மது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு அலகு என்பது ஏறத்தாழ ஒரு சிறிய கிளாஸ் ஒயினைக் குறிக்கிறது.
ஆனால் மக்கள் திருமணநாள், பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் தினங்களில் அளவுக்கு மீறி குடிக்கின்றனர் என்றும் தாங்கள் குடிக்கும் அளவை அவர்கள் அறியாமல் போதையில் மூழ்கிக் கிடக்கின்றனர் எனவும் இந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
மேலும் முந்தைய ஆராய்ச்சியில் சுட்டிக் காட்டியதை விட 19 சதவிகிதம் ஆண்களும், 26 சதவிகிதம் பெண்களும் கூடுதல் குடிப்பழக்கம் உடையவர்களாக இருப்பதை இந்தப் புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது
No comments:
Post a Comment