பிரான்சில் கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பின்படி வேலையில்லாதோர் பற்றிய புள்ளிவிவரங்களின் எண்ணிக்கை 4,34,000மாக உயர்ந்து 3.16 மில்லியனை எட்டியுள்ளது.
பிரான்சில் கடந்த 1997ம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி வேலையில்லாதோரின் எண்ணிக்கை 3.19 மில்லியன் பேர் ஆவர்கள். இதை தொடர்ந்து இன்றும் 3.16 மில்லியன் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
யூரோ மண்டலத்தின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளம் பெற்ற நாடான பிரான்சில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் விளைவாக வேலையில்லாக் கொடுமை பெருகிவருகிறது.
இடதுசாரி அரசு இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. மேலும் நாட்டின் பொருளாதாரம் நலிந்து காணப்படுவதால் இந்த வருடம் மக்களுக்கு வரிச்சுமை இருக்காது என்று ஜனாதிபதி ஹோலாண்ட் (Hollande)கூறினாலும் நாட்டின் செலவுகளை சமாளிக்க அவர் அரும்பாடுபடுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது வேலைவாய்ப்புயில்லாக் கொடுமை குறைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று ஹோலாண்ட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment