siruppiddy nilavarai.com navarkiri.net
Showing posts with label இணைய செய்தி. Show all posts
Showing posts with label இணைய செய்தி. Show all posts

January 26, 2023

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுபவர்களை பற்றிய ஓர் சிறந்த பதிவு ஒன்று

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுவது என்பது ஒரு சிறந்த செயலாக நான் கருதவில்லை.வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இன்னைக்கு நிறைய பேர் மத்தவங்களை இம்ப்ரஸ் பண்ண தான் போடுறாங்க…(நல்லவிதமா யூஸ் பண்ற உங்களுக்கு இதை நான் சொல்லல…)
மத்தவங்கள இம்பிரஸ் பண்ண செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் நம்மளுக்கு தோல்வியை தான் தரும்.முதல்ல நாம நம்மளை இம்ப்ரஸ் பண்ண கத்துக்கணும்…நம்மள யாரும் கவனிக்காத நிலைமையில் நாம் என்ன செய்கின்றோம் அதுதான் நம்முடைய சாதனை
இப்ப நான் நான் என்னோட பிரெண்ட்ஸ் நிறைய பேரை
 பார்த்து இருக்கேன்.. அவனுங்க ஒரு ஸ்டேட்டஸ் போடுவானுங்க வாட்ஸப்ல…போட்டு ஐந்து நிமிடம் கூட இருக்காது.. இந்த ஸ்டேட்டஸ் யார் யார் பார்த்து இருக்காங்க, யார் யார் பார்க்கல, பார்க்கவில்லை என்றால் நீங்க ஏன் பார்க்கல ஆன்லைன்ல தான் இருந்தாங்க ஏன் 
பார்க்கவில்லை…
இப்படி யோசித்து மன வியாதிக்கு ஆளாக கூடிய ஆட்கள் இருக்காங்க.சில பேர் இருக்காங்க சோகமா இருந்தா அம்மா ஸ்டேட்டஸ் அப்பா ஸ்டேட்டஸ் பாடல்கள் போடுவாங்க…ஆனா அவங்க அம்மாவுக்கும் 
அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி பேச மாட்டாங்க…அந்த ஸ்டேட்டஸ் பாடலை அவங்க அம்மாவும் அப்பாவும் பார்த்து
 இருக்க மாட்டாங்க.
அப்ப இதெல்லாம் யாருக்கு பண்றானுங்க..நீ ஒரு பாடலை தேடி அதை டவுன்லோட் பண்ணி வாட்ஸ் அப்ல ஒரு ஸ்டேட்டஸ் வைக்கிறது கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் வைத்துக் கொள்ளுங்களேன்…அந்தப் பத்து நிமிஷத்துல அவ கிட்ட போன் பண்ணி நீங்க பேசி விடலாமே.. அவளுக்கு 
நிறைய திருப்தி வருமே.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



May 1, 2019

ஓர் முக்கியமான செய்தி விண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளமாக விண்டோஸ் 10 காணப்படுகின்றது.இவ் இயங்குதளத்தினை கணினியில் நிறுவுவதற்கு 16GB தொடக்கம் 
20GB வரையான சேமிப்பு வசதி தேவைப்பட்டது.இந்நிலையில் விண்டோஸ் 10 புதிய பதிப்பு ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம்
 வெளியிடவுள்ளது.இப் பதிப்பு எதிர்வரும் 
மே மாதம் அறிமுகம் செய்யப்படுகின்றது.இப் புதிய பதிப்பினை கணினியில் நிறுவுவதற்கு மேலும் அதிக 
இட வசதி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி 30GB வரை இடவசதி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள பதிப்பானது 1903 அல்லது 19H1 என 
அழைக்கப்படும் என தெரிகிறது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


September 28, 2017

140 எழுத்துக்களுக்கு பதில் 280 எழுத்துக்கள் ட்விட்டரில் பதிவு செய்யலாம்!

ட்விட்டரில் 140 எழுத்துக்களுக்கு பதில் 280 எழுத்துக்களைப் பதிவு செய்யும் வசதி, சோதனை அடிப்படையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் இதுவரை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்தைப் பதிவிட முடியும் என்ற வரை
முறை இருந்தது.
இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, சோதனை முன்னோட்டமாக 140 எழுத்துக்களுக்கு பதிலாக 280 எழுத்துக்கள் வரை பதிவிடலாம் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் வரவேற்பைப் பெறும் என தாம் நம்புவதாக ட்விட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

July 29, 2015

வெளியாகிறது விண்டோஸ் 10!!!பதிப்பை பெற நீங்கள் செய்யவேண்டியவை இவைதான்!!!

ஜூலை 29 அதாவது இன்று  விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாக உள்ளது. மொத்தமாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே காலத்தில் தராமல், படிப்படியாக, அதன் சோதனை வாடிக்கையாளர்களிடம் தொடங்கி, அடுத்தடுத்து, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட உள்ளது. நீங்கள் ஏற்கனவே இன்சைடர் புரோகிராமில் உறுப்பினராக இருந்தாலும், விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதற்கு, முன்பதிவினைச் செய்திருந்தாலும், சில முன்னேற்பாடுகளை மேற்கொண்டு தயாராகவும். அவற்றை இங்கு பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்: விண் 10னைப் பெறத் தயாராகும் முன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மெயில் அக்கவுண்ட் ஒன்றை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உங்களிடம் அவுட்லுக் டாட் காம், ஹாட் மெயில், எக்ஸ்பாக்ஸ் அல்லது லைவ் ஐ.டி. என எதனைக்கொண்டிருந்தாலும், அது மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்தான். உங்களிடம் இவை இல்லை என்றால், உடனே ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும். அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணயதள முகவரி:
Click Here to signup for Microsoft
மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை இல்லை என்றாலும், செட்டிங்ஸ் அமைப்பில் ஒருங்கிணைப்பு செய்வதற்கு அது தேவையாக இருக்கலாம். டேட்டா பேக் அப் செய்வதற்கும்,க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் சில வசதிகளைப் பெறுவதற்கும் எளிதாக
 இருக்கலாம்.
உங்கள் பதிப்பை முன்பதிவு செய்திடுக: கூடிய விரைவில், உங்களுக்கான விண்டோஸ் 10 பதிப்பினை நீங்கள் பெற விரும்பினால், உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதற்கான
 தகுதியைக் கொண்டிருந்தால், இப்போதே, அதற்கான முன்பதிவினை மேற்கொள்ளவும். எப்படி ரிசர்வ் செய்வது என முந்தைய
 கம்ப்யூட்டர் மலரில் விரிவாகத் தரப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றவும்.
எந்த பதிப்பு உங்களுக்கானது?: உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ற வகையில், விண் 10 வகை கிடைக்கும். ஆனால், அதைக் காட்டிலும் உயர்நிலைப் பதிப்பு 
வேண்டுமென்றால், கட்டணம் செலுத்திப் பெற வேண்டியதிருக்கும். அனைத்து பதிப்புகளிலும் அடிப்படை வசதிகள் ஒரே மாதிரியாகவே தரப்பட்டுள்ளன. அவை: 
Cortana, Hello, Edge, Continuum, and Multi-doing. மற்ற பிசினஸ் பதிப்பு (ப்ரோ, எண்டர்பிரைஸ்) களிலும், கல்விப் பிரிவிற்கான பதிப்புகளிலும் உள்ள வசதிகளை, ஹோம் பதிப்பு பயன்படுத்துபவர்கள் விரும்ப மாட்டார்கள்.
உங்கள் ஹார்ட்வேர் அமைப்பை உறுதி செய்க: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 / 8/ 8.1 இயங்கிக் கொண்டிருந்தாலும், கீழ்க்காணும் குறைந்த பட்ச ஹார்ட்வேர் தகுதிகளை, கம்ப்யூட்டர் கொண்டிருப்பதனை உறுதி செய்திடுக.
1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்.
1 கிகா பைட் (32 பிட்) / 2 கிகா பைட் (64 பிட்) ராம் மெமரி.
32 பிட் ஓ.எஸ்.என்றால், குறைந்தது 16 ஜி.பி. ஹார்ட் டிஸ்க்கில் காலியாக இருக்க வேண்டும். அதுவே, 64 பிட் எனில், 20 ஜி.பி. இடம் வேண்டும். DirectX 9 or later with WDDM 1.0 driver கொண்டதாக உங்கள் 
கிராபிக்ஸ் கார்ட் இருக்க வேண்டும். திரை டிஸ்பிளே 800×600 பிக்ஸெல் திறன் கொண்டிருக்க வேண்டும். DirectX 9 அல்லது அதற்குப் பின் வந்தவற்றை உங்கள் கிராபிக்ஸ் கார்ட் திறனாகக் கொண்டிருக்கவில்லை என்றால், விண்டோஸ் 10 உங்கள் கம்ப்யூட்டரில் இயங்காது.
விண்டோஸ் அப்டேட் செய்திடுக: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திடும் முன்னர், உங்களுடைய அப்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்திடுக. முழுமையாக பேட்ச் பைல்களை அப்டேட் செய்திடவும். இதற்கு எளிதான வழி Windows Update இயக்குவதுதான். இதனை இயக்கினால், அது தானாகவே, அனைத்தையும் அப்டேட் செய்து, விண்டோஸ் 10 பெறுவதற்கான ஐகானையும் உங்கள் கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில் வலது மூலையில் தந்திடும்.
சாப்ட்வேர் அனைத்தும் அற்றைப்படுத்துக: கம்ப்யூட்டரில் உள்ள தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும், அவற்றின் இணைய தளம் சென்று, அப்டேட் செய்திடவும். அனைத்து நிறுவனங்களுக்கும், அவர்களின் சாப்ட்வேர் தொகுப்புகளை வடிவமைத்திடுவதற்காக, மைக்ரோசாப்ட் விண் 10 சிஸ்டத்தினைக் கொடுத்தது. ஆனால், பல நிறுவனங்கள், இன்னும் அப்டேட் செய்ததாகத் தெரியவில்லை. எனவே, அந்த குறிப்பிட்ட 
சாப்ட்வேர் நிறுவனத்தின் தளம் சென்று, இதற்கான முயற்சிகளில் இறங்கவும். குறிப்பாக, சில சாப்ட்வேர் தொகுப்புகள், உங்களின் அன்றாட பணிகளுக்குத் தேவையாக இருக்கும். அவை இயங்காவிட்டால், பணியே மேற்கொள்ள இயலாது. அப்படிப்பட்டவற்றை கட்டாயம் 
அப்டேட் செய்திடவும். அந்நிறுவனம் அப்டேட் செய்திடவில்லை என்றால், பழைய பதிப்பு, விண் 10ல் இயங்குமா என்பதனை உறுதி செய்து கொள்ளவும். அதன் பின்னரும் இல்லை என்றால், விண் 10 பக்கம் அப்போதைக்குச் செல்லாமல் இருப்பது நல்லது.
துணை சாதனங்கள் சோதனை: நம் கம்ப்யூட்டருடன், பிரிண்டர், ஸ்கேனர், மோடம், இணைய கேமரா, நெட்வொர்க் கார்ட், வீடியோ கார்ட் போன்றவற்றைப் பயன்படுத்துவோம். இவை அனைத்தும் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இயங்குமா எனக் கண்டறியவும். அதற்கான ட்ரைவர் பைல்கள், அவற்றின் இணைய தளத்தில் உள்ளனவா என்று பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
டேட்டா பேக் அப்: விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்து கொள்வது என்பது நாம் நம்மைச் சிறந்த முறையில் பாதுகாப்பாக வைக்கின்ற வழியாகும். இருப்பினும், இது ஒரு அப்கிரேட் தான். எனவே, உங்களுடைய மிக முக்கியமான டேட்டாவினைப் பாதுகாப்பாக நகல்
 ஒன்று எடுத்து வைக்கவும்.
தேவையான இடம்: கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் தேவையான இடம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால், அதனை உருவாக்கவும். அப்கிரேட் செய்வதற்கு முன்னர், அதற்கான பைல்களைத் தரவிறக்கம் செய்திட 3 ஜி.பி. இடம் தேவைப்படும். டேப்ளட் பி.சி.க்களில் இது பிரச்னையாக இருக்கலாம். எனவே, காலி இடத்தை முதலில் உறுதி செய்திடுங்கள்.
உங்களுடைய சாப்ட்வேர் தொகுப்பை அறிந்து கொள்க: விண்டோஸ் 10, இன்ஸ்டால் செய்யப்படும் முன், உங்களுடைய செக்யூரிட்டி அல்லது ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பினை செயல் இழக்கச் செய்திடும். விண்டோஸ் 10 அப்போது, நீங்கள் அமைத்த 
செட்டிங்ஸ் முதலானவற்றை ஒரு நகலாகத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். அது விண் 10 உடன் இணைந்து செயலாற்றும் என்றால், அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடும். இல்லை எனில், அதன் Defender செயலியை இன்ஸ்டால் செய்திடும்.
1.உங்களிடம் விண்டோஸ் 7./8./8.1 இருப்பின், விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்யப்படுகையில், விண்டோஸ் மீடியா சென்டர் நீக்கப்படும்.
2.டிவிடிக்களை இயக்கிப் பார்க்க, தனியே ஒரு தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தேவைப்படும்.
3.விண்டோஸ் 7 டெஸ்க்டாப் இயக்க செயலிகள் அனைத்தும் நீக்கப்படும்.
4.விண்டோஸ் 10 ஹோம் இன்ஸ்டால் செய்யப்பட்டால், விண்டோஸ் அப்டேட் பைல்கள் தாமாகவே உங்களுக்குக் கிடைக்கும்.
5.விண்டோஸ் 7 உடன் தரப்பட்ட சாலிடேர், மைன்ஸ்வீப்பர், ஹார்ட்ஸ் கேம்ஸ் ஆகியவை நீக்கப்படும். இவற்றின் இடத்தில், மைக்ரோசாப்ட் “Microsoft Solitaire Collection” and “Microsoft Minesweeper” ஆகியவற்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
6.உங்களிடம் யு.எஸ்.பி. ப்ளாப்பி ட்ரைவ் இருந்தால், விண்டோஸ் அப்டேட் தளத்திலிருந்து
அதற்கான ட்ரைவர் பைல்களை காப்பி செய்து இயக்கிக் கொள்ள வேண்டும்.
விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்யப்படுகையில், கம்ப்யூட்டரில் உள்ள செயலிகள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு, விண் 10 உடன் இணைந்து இயங்காத செயலிகள் அனைத்தும் நீக்கப்படும்.
எனவே, இன்ஸ்டலேஷன் செயல்முறையின் போது, கிடைக்கும் டயலாக் பாக்ஸ்களைக் கூர்ந்து கவனித்துப் படிக்கவும். படிக்காமல் Next கிளிக் செய்திட வேண்டாம்.
நீங்களும் அதனை விரும்புவீர்கள். எனவே, உங்கள் சிஸ்டத்தினை அப்டேட் செய்து, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான முன்பதிவினை மேற்கொண்டு வைத்திடவும். விரைவில் உங்களுக்கான விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்திடும் வாய்ப்பு கிடைக்கும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

April 30, 2014

இடைமுகத்துடன் Firefox உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு

  முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றான Firefox உலாவியின் 29வது பதிப்பு Mozilla நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் புதிய வடிவமைப்புடனும், அனைத்து செயற்பாடுகளையும் ஓரிடத்தில் உள்ளடக்கிய புதிய மெனு என்பவற்றினைக் கொண்டதாக காணப்படுகின்றது. அத்துடன் டேப் வசதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னைய பதிப்புக்களை விடவும் முற்றிலும மாறுபட்ட இணைய தேடல் அனுபவத்தினை பயனர்களுக்கு இப்புதிய உலாவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

.

February 3, 2014

விண்டோஸ் 8.1 சாதனங்களுக்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷன் அறிமுகம்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிந்திய பதிப்பான விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நண்பர்களுடனான சட்டிங்ஸ் மற்றும் பின்னூட்டல்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் இலகுவாகவும், விரைவாகவும் புகைப்படங்களை தரவேற்றும் வசதியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இவை தவிர கொமண்ட்ஸ், லைக் போன்ற செயற்பாடுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் முடியும்.
 

February 2, 2014

அறிமுகம்-Microsoft Surface Pro

பல்வேறு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் டேப்லட்கள் வரிசையில் புதிதாக Microsoft Surface Pro இணைந்துள்ளது.

இந்த டேப்லட் ஆனது 128GB சேமிப்பு கொள்ளளவுடைய இந்த டேப்லட்டின் விலையானது 499.99 டொலர்களில் இருந்து 400 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

10.6 அங்குல அளவுடையதும் 1920 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் Windows 8 Pro இயங்குதளம், Intel Core i5 மூன்றாம் தலைமுறை Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவும் தரப்பட்டுள்ளன.

January 25, 2014

கணனியில் நிறுவிய மென்பொருட்களை முற்றாக நீக்குவதற்கு

தேவையேற்படும்போது கணினியில் நிறுவிய மென்பொருள் ஒன்றினை சில நேரங்களில் நீக்குவதற்கான அவசியங்கள் ஏற்படலாம். இவ்வாறான தருணங்களில் குறித்த மென்பொருள் தொடர்பாக நிறுவப்பட்ட அனைத்து கோப்புக்களும் கணனியிலிருந்து நீக்கப்படுவதில்லை. இதனால் தேவையற்ற கோப்புக்கள் கணனியில் தேங்கி அதன்

செயற்பாட்டு வேகம் குறைவடைவதுடன், வன்றட்டில் சேமிப்பு இடம் விரயம் செய்யப்படும். இதனைத் தவிர்ப்பதற்கு Your Uninstaller! PRO எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. 

January 22, 2014

அறிவிப்பால் நெருக்கடியை சந்திக்கும் வங்கிகள்


மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது Windows XP இயங்குதளத்திற்கான உத்தரவாதத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தமை தெரிந்ததே.
இந்நிலையில் உலகெங்கிலும் அதிகளவான கணனிகள் Windows XP இயங்குதளத்தில் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதனால் அந்நிறுவனம் இக்கால எல்லையை 2015ம் ஆண்டு வரை நீடித்துள்ளது.
எனினும் தற்போது வெளியான ஒரு அறிக்கையின்படி உலகெங்கிலும் உள்ள வங்கி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 95 சதவீதமான பண இயந்திரங்களில் Windows XP இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 420,000 இற்கும் மேற்பட்ட இயங்திரங்கள் இவ்வியங்குதளத்தினைக் கொண்டுள்ளன.
இதேவேளை 15 சதவீதமான பண இயந்திரங்களில் தற்போது Windows 7 நிறுவப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

January 21, 2014

Intel நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை

 மைக்ரோ புரோசசர், சிப்ஸ் போன்றவற்றினை உருவாக்குவதில் பிரபல்யம் வாய்ந்த நிறுவனமான Intel தனது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி அடுத்த வருடத்திற்குள் தமது பணியாளர்களின் எண்ணிக்கையை 5380 இனால் குறைக்கவுள்ளது.

தற்போது உலகெங்கிலும் சுமார் 107,600 பணியாளர்களைக்
கொண்டுள்ள Intel நிறுவனம் 5 சதவீதமான பணியாளர்களையே குறைக்கவுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த Intel நிறுவனத்தன் பேச்சாளர் Kraeuter “ஓய்வு பெறுபவர்கள், சுயமாக வேலையை விட்டு விலகுபவர்கள் உட்பட மேலும் சில பணியாளர்களையே நிறுத்தவுள்ளதாக” குறிப்பிட்டார்
 

January 6, 2014

யாகூ இணையத்தளத்திலிருந்து மல்வேர் தாக்குதல்


பிரபல தேடுபொறிகளுள் ஒன்றாகத் திகழும் யாகூ இணையத்தில் மல்வேர்கள் காணப்படுவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மல்வேர்கள் அனைத்தும் யாகூ தளத்திலுள்ள விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் பயனர்களின் கணிகளுக்குள் ஊடுருவி தாக்குவதாக கூறப்படுகின்றது.
மணித்தியாலம் ஒன்றுக்கு 300,000 பேர் யாகூ தளத்திற்கு வருவதாகவும் இதில் 27,000 பேர் மல்வேர் தாக்குதலுக்கு இலக்காவதாகவும் நெதர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் யாகூவின் இணையப் பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
 

December 25, 2013

பயனர்களுக்கு அதிரடிச் சலுகையை வழங்கும் Surdoc


தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு அங்கமாக திகழும் கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியனாது தற்போது பிரபலமாகி வருகின்றது

இச்சேவையினை Dropbox, Box, Google Drive போன்ற பல்வேறு நிறுவனங்கள் வழங்கிவந்த போதிலும் பயனர்களுக்கு அதிகளவு சேமிப்பு வசதியை இலவசமாக வழங்குவதில்லை.
ஆனால் Surdoc எனும் நிறுவனம் இலவசமாக 100GB சேமிப்பு வசதியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் அன்ரோயிட் சாதனங்களை பயன்படுத்துபவர்களே இவ்வசதியை பெற முடியும் என்பதுடன் அப்பிள் மற்றும் விண்டோஸ் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய கிளவுட் ஸ்டோரேஜ் அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.
 

December 16, 2013

Gmail தரும் புத்தம் புதிய வசதி ..


மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் முன்னணியில் திகழும் Gmail ஆனது தனது பயனர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இதுவரை காலமும் மின்னஞ்சல்களுடன் இணைக்கப்படும்

 படங்களை நேரடியாக பார்க்க கூடிய வசதி (Preview) தரப்பட்டிருக்கவில்லை. எனினும் தற்போது மின்னஞ்சலில் இணைக்கப்படும் படங்களை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியினை டெக்ஸ்டாப், iOS மற்றும் அன்ட்ரோயிட் சாதனங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
 

December 11, 2013

புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்




முன்னணி சமூக வலைத்தள சேவையை வழங்கிவரும் பேஸ்புக் நிறுவனமானது தற்போது மற்றுமொரு முயற்சியில் காலடி பதிக்கின்றது.

அதாவது செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட (Artificial Intelligence ) சாதனங்களை உருவாக்குவது தொடர்பான முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக பொறிகள் தொடர்பாக ஆராய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், மொபைல் ரோபோட்டிக்ஸ்டில் வல்லவருமான Yann LeCun என்பவரை தேர்ந்தெடுத்துள்ளது.

நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான இவரே இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட சாதனங்களை வடிவமைக்கும் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

 

December 6, 2013

லட்சக்கணக்கான பயனர்களின் தகவல்கள் திருட்டு, ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

பேஸ்புக், டுவிட்டர், கூகுள், யாகூ போன்ற பல்வேறு தளங்களில் கணக்குகளை வைத்திருப்பவர்களில் சுமார் 2 மில்லியன் வரையானவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
தரவுத்தளம் (Database) ஒன்றிலிருந்தே இவர்களின் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் பேஸ்புக் தொடர்பாக 318,121 நபர்களின் தகவல்களும், டுவிட்டர் தொடர்பாக 21,708 நபர்களின் தகவல்களும், கூகுள் தொடர்பாக 54,437 தகவல்கள் மற்றும் யாகூ தொடர்பாக சுமார் 59,549 தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





 

November 23, 2013

Zopo அறிமுகப்படுத்தும் 8 Core ஸ்மார்ட் கைப்பேசி

Zopo எனும் நிறுவனம் 8 Core Processor இனைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் வேகம் 1.7GHZ ஆக காணப்படுகின்றது.

மேலும் 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரை, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் 14 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியமான கமெராவினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 299 டொலர்கள் ஆகும்


பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை உருப்பெருக்கம் (Zoom) செய்ய உதவும் நீட்சி


பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை உருப்பெருக்கம் (Zoom) செய்ய உதவும் நீட்சி
சமூக வலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு ஏற்கணவே பல நீட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்சியாக இப்பொழுது Facebook Photo Zoom எனும் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த நீட்சியின் உதவியுடன் பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் புகைப்படங்களை நேரடியாகவே உருப்பெருக்கம் செய்ய முடியும்.

கூகுள் குரோம் மற்றும் பையர்பொக்ஸ் உலாவிகளுக்காக இந்த நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

October 30, 2013


உங்கள் விருப்பங்களை அறிந்து சொல்லும் கமெரா தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனமாக இன்று பல்வேறு மாற்றங்கள் அசுர வேகத்தில் இடம்பெற்றுவருகின்றன. அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகிளின் கண்டுபிடிப்புக்கு பின்னர் அவற்றின் பயனானது பரந்துபட்டதாகக் காணப்படுகின்றது. தற்போது ஸ்மார்ட் கைப்பேசியினை அடிப்படையாகக் கொண்டதும் தலையில் அணியக்கூடியதுமான விசேட கமெரா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்கமெராவானது மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் அலைகளை துல்லயமாக அறிந்து ஒரு நபரின் விருப்பங்களை பதிவு செய்யும் ஆற்றல் உடையதாகக் காணப்படுகின்றது.

October 17, 2013

Square Cash ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம்


தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தோற்றம் பெற்ற ஒரு சேவையாக ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை விளங்குகின்றது.
தற்போது உள்ள ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் Paypal ஆனது பிரபல்யம் வாய்ந்ததாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும்

 காணப்படுகின்றது.
இந்நிலையில் Paypal - ற்கு நிகரான Square Cash எனும் பிறிதொரு ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் இச்சேவையானது முதன் முதலாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
இதற்காக iOS மற்றும் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் இதன் மூலம் பயனர் ஒருவர் வாரம் ஒன்றிற்கு 2,500 டொலர்களை ஆகக்கூடுதலான தொகையாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

October 12, 2013

விண்டோஸ் 8க்கான ஷார்ட்கட் கீகள்


விண்டோஸ் 8 அடிப்படையில் தொடுதிரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும்.
இருப்பினும் இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம்.
இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தேடல்
Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனுவினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற.
Win + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக்(Aero peek) பெற.
சார்ம்ஸ் மெனு
Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.
ஸ்விட்ச் மெனு
Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட்(Switch List) திறக்க.
பேனர்கள்
Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க.
Win + H - ஷேர் பேனல் (Share panel) திறக்க.
Win + K - புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.
அப்ளிகேஷன் பார்
Win + Z -அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.
ஸ்கிரீன் ஷாட்
Win + Print Scrn - இந்த கீகளை அழுத்துகையில் திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்டரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது.