பிரிட்டனின் 'இரும்புப் பெண்மணி' என்றழைக்கப்பட்டவர் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆவார்.
87 வயதான இவர் 1980ம் ஆண்டு வடக்கு அயர்லாந்து நாட்டில் தாட்சர் சுற்றுப்பயணம் செய்தார். இந்த சுற்றுப் பயணத்துக்காக குண்டு துளைக்காத பஸ்சை தாட்சர் பயன்படுத்தினார்.
28 ஆயிரம் கிலோ மீற்றர் மட்டுமே ஓடியுள்ள இந்த பஸ்ஸை ஓர் இடத்தில் நிறுத்தி வைத்து பாதுகாத்து வந்தனர். அரசிடம் இருந்து இந்த பஸ்சை வாங்கிய ஒருவர் ஏலம் விடப்போவதாக அறிவித்தார்.
சக்தி வாய்ந்த 'ரோல்ஸ் ராய்ஸ்' என்ஜின், குண்டுகள், அணு ஆயுதங்கள் ரசாயன ஆயுதங்கள் போன்றவை துளைக்க முடியாத வகையில் உருவாக்கப்பட்ட இந்த பஸ்சின் ஏலம் லண்டனில் நடைபெற்றது.
10 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16 ஆயிரத்து 940 பவுண்டுகளுக்கு இதை ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.[புகைபடங்கள்]
No comments:
Post a Comment