இந்தோனேசியாவின் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியான பப்புவா மாகாணத்தில், தனி நாடு கேட்டு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆயுதம் தாங்கிய குமபல்கள் அரசுடன் சண்டையிட்டு வருகிறது.
நேற்று பங்காக் மலைப்பகுதியில் இருந்த மிலிடரி நிலை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவத்தினரில் ஒருவரும் தீவிரவாதிகளில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, அப்பகுதியில் ரோந்து சென்ற ராணுவத்தினர் மீது, அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில் ராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர்.அவர்களுடன் இருவேறு இடங்களில் நடந்த சண்டையில் மொத்தம் 8 ராணுவத்தினரும், 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சுதந்திர பப்புவா இயக்கத்தினரின் வேலையாக இருக்கலாம் என்று அரசு கூறியுள்ளது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். இவர்களால், சுற்றுலாப் பயணிகளுக்கும் அச்சுறுத்தல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment