தனிநபர் படகுப்போட்டியில்
கலந்து கொண்ட பெர்னார்டு ஸ்டாம் ரஷ்யக்கப்பலின் உதவியைப் பெற்றதால் தகுதிநீக்கம்
செய்யப்பட்டார்.
கடல் மார்க்கமாக உலகை சுற்றிவரும் போட்டி நடந்தது. இப்போட்டியில்
பங்குபெறுபவர்கள் படகை எங்கும் நிறுத்தகூடாது, யாருடைய உதவியும் பெறக்கூடாது என்பது
விதியாகும். இப்போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மாலுமி பெர்னார்டு ஸ்டாம் கலந்து கொண்டார். இந்நிலையில் போட்டியின் விதிமுறைகளை மீறியதாக இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி தன்னுடைய படகை நியூசிலாந்தின் ஆக்லாந்து தீவில் நிறுத்தியதாகவும், ரஷ்ய கப்பலின் உதவியை பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்து பெர்னார்டு, தன்னுடைய படகுக்குள் கடல்நீர் புகுந்து விட்டதாகவும், வேறு வழியின்றி படகை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னை நோக்கி ரஷ்யாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று வந்தது. அதிலிருந்த ஒருவர் தனக்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இத்துடன், தன்னுடைய சூழலை புரிந்து கொண்டு தகுதிநீக்கம் செய்யப்பட்ட முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் |
January 3, 2013
போட்டியிலிருந்து நீக்கப்பட்ட சுவிஸ் மாலுமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment