Nokia.முன்னணி கைப்பேசி உற்பத்தி
நிறுவனமான Nokia புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய Lumia 505 எனும் கைப்பேசிகளை
அறிமுகப்படுத்துகின்றது.
Windows Phone 7.8 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசிகள் 3.7 அங்குல
அளவுடைய AMOLED தொழில்நுட்பத்திலமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ளன. தவிர 800MHz
வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 256 MB RAM
ஆகியவற்றினையும் உள்ளடக்கியவாறு காணப்படுகின்றன. இக்கைப்பேசிகளின் எடையானது 131 கிராம்களாக காணப்படுவதுடன் 118.1 x 61.2 x 11.3 mm என்ற அளவுப்பரிமாணத்தையும் கொண்டுள்ளன. இவற்றுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 4GB வரையான சேமிப்பு வசதி என்பனவற்றுடன் SkyDrive மூலமாக 7GB வரையான மேலதிக சேமிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவற்றில் இணைக்கப்பட்டுள்ள 1300mAh மின்கலமானது Standby நிலையில் 600 மணித்தியாலங்கள் வரை இருக்கும். அத்துடன் 3G அழைப்புக்களின்போது 7.2 மணித்தியாலங்களும், மியூசிக் பிளே செய்யும்போது 36 மணித்தியாலங்களும் தொடர்ச்சியான பாவனையை கொண்டுள்ளது. மேலும் இக்கைப்பேசிகள் சிவப்பு, மென்சிவப்பு, மற்றும் கறுப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன{வீடியோ இணைப்பு} |
December 17, 2012
அறிமுகப்படுத்தும் Lumia 505 கைப்பேசிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment