siruppiddy nilavarai.com navarkiri.net

December 28, 2012

Archos அறிமுகப்படுத்தும் 97 Titanium HD Tablet

நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய Tablet கணினிகளின் வரிசையில் 97 Titanium HD எனும் Android 4.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Tablet - இனை Archos நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது. 2048 x 1536 Pixel Resolution மற்றும் 9.7 அங்குல அளவுடையதுமான தொடுதிரையினைக் கொண்ட இவை 1.6GHz வேகத்தில் செயலாற்றும் Dual-Core Processor உடன் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா உள்ளடங்கலாக 2 மெகாபிக்சல்கள் கொண்ட முகப்பு கமெரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.
தவிர இவற்றின் சேமிப்பு கொள்ளளவு 8GB ஆக அமைந்திருப்பதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 64GB வரை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment